19 டிச., 2010

சுனில் ஜோஷியின் கொலையைக் குறித்து விசாரிக்க வேண்டும் -திக்விஜய் சிங்

புதுடெல்லி,டிச.19:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான சுனில் ஜோஷியின் கொலையைக் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளைக் குறித்த விபரங்கள் சுனில் ஜோஷிக்கு தெரியுமென்பதால் அவர் கொலைச் செய்யப்பட்டார் என திக்விஜய்சிங் குற்றஞ்சாட்டினார்.

உண்மைகளை கண்டறியாமலேயே சுனில் ஜோஷியின் கொலை வழக்கை மத்திய பிரதேச பா.ஜ.க அரசு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

தேசிய புலனாய்வு ஏஜன்சியும், ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் இதற்கு முன்பு இவ்வழக்கை விசாரித்திருந்தன. கொலைவழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸுடன் தொடர்புடையவர்களாவர்.

தனது சொந்த பிரச்சாரக்களை பொறுத்துக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் பிறமக்களுடன் எவ்வாறு நடந்துக்கொள்வார்கள்? என திக்விஜய்சிங் கேள்வி எழுப்புகிறார்.

2007 டிசம்பரில் மத்தியபிரதேச மாநிலத்தில் கொல்லப்பட்ட சுனில் ஜோஷிக்கு அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் போன்ற குண்டுவெடிப்புகளுடனும், மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரை கொலைச்செய்த வழக்கிலும் தொடர்பு உண்டு என திக்விஜய்சிங் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு வெடிக்குண்டை தயாரிப்பதுக் குறித்து பயிற்சியளிக்கவே சுனில் ஜோஷியை பயன்படுத்தியுள்ளனர். அவருக்கு கூடுதல் விபரங்கள் தெரியும். ஜோஷி கொலைவழக்கில் நான் ஏற்கனவே சி.பி.ஐ விசாரணையை கோரியிருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை என திக்விஜய்சிங் தெரிவிக்கிறார்.

உண்மைகள் கண்டறிவதற்கு தயாராகமலேயே இறுதி அறிக்கையை தயார் செய்து வழக்கை முடித்துக்கொள்ளப் போகிறது மத்திய பிரதேச பா.ஜ.க அரசு.

யாருடைய கட்டளையின் பேரில் இவ்வழக்கை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது? என்பதுக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என திக்விஜய்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுனில் ஜோஷியின் கொலையைக் குறித்து விசாரிக்க வேண்டும் -திக்விஜய் சிங்"

கருத்துரையிடுக