19 டிச., 2010

வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் மாநாடு

புதுடெல்லி,டிச.19:மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள் உட்பட இந்தியாவில் நடந்த தீவிரவாத செயல்களில் வலதுசாரி தீவிரவாதத்தின் பங்கினைக் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதை இன்று துவங்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னோடியாக பார்லி.அனக்ஸ் கட்டிடத்தில் நடந்த காங்கிரஸ் காரிய நிர்ணய கமிட்டி அங்கீகரித்துள்ளது. இத்தீர்மானம் இன்றைய மாநாட்டில் விவாதிக்கப்படும்.

சோனியா காந்தி தலைமையில் கூடிய கமிட்டி இதனை அங்கீகரித்துள்ளது. நான்கு மணிநேரம் நீண்ட கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கெ.அந்தோணி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.

மதத் தீவிரவாதம் மற்றும் ஊழல் ஆகியவற்றுடன் எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை பிரகடனப்படுத்தும் அரசியல் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்படும்.

சிறுபான்மை-பெரும்பான்மை தீவிரவாதச் செயல்கள் ஒரேபோல நாட்டிற்கு ஆபத்தானதாகும். இந்தியாவின் ஐக்கியம், அகண்டத் தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை பேணிப் பாதுகாப்பதற்கு திறமையுள்ள ஒரே கட்சி காங்கிரஸ் என்ற நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும்விதமாக அரசியல் தீர்மானம் அமையும்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 1250 உறுப்பினர்களைத் தவிர பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 15ஆயிரம் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் மாநாடு"

கருத்துரையிடுக