டெல்அவீவ்,டிச:முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே காட்ஸேவ் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றவாளியென இஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1998 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த மோஷே காட்ஸேவ் தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்மணியொருவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அப்பெண்மணி ஆஜராக்கிய ஆதாரங்களும், வாக்குமூலமும் காட்ஸேவ் குற்றவாளி என்பதை நிரூபிப்பதாக நீதிபதி ஜோர்ஜ் காரே தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பெஞ்சின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பாலியல் வன்புணர்ச்சிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். காட்ஸேவ் உச்சநீதிமன்றத்தை மேல்முறையீட்டிற்காக அணுகுவார் எனத் தெரிகிறது.
2006 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்மணி வழக்கு தொடுத்ததையடுத்து காட்ஸே அடுத்த ஆண்டிலேயே பதவி விலகினார்.
1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலாத்துறை அமைச்சக கட்டிடத்தில் வைத்தும், ஜெருசலமில் ஹோட்டல் அறையில் வைத்தும் காட்ஸே அப்பெண்மணியை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். இதர இரண்டு பெண்மணிகளை கடந்த 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பாலியல் ரீதியாக கொடுமைச் செய்ததாகவும் அவருக்கெதிராக வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
காட்ஸேவின் கோரிக்கையின்படி பாலியல் கொடுமை வழக்கு 2008 ஆம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் இஸ்ரேலின் அதிபராக பதவி வகித்தவர் காட்ஸேவ்.
தீர்ப்பை கேட்பதற்கு காட்ஸேவ் தனது பிள்ளைகளுடன் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. தீவிர வலதுசாரி ஆதரவு கட்சியான லிக்யூட் கட்சியின் உறுப்பினரான காட்ஸேவ் அதிபராவதற்கு முன்னர் ஏராளமான அமைச்சக
பதவிகளை வகித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: முன்னாள் இஸ்ரேல் அதிபர் மோஷே காட்ஸேவ் குற்றவாளி"
கருத்துரையிடுக