31 டிச., 2010

பிரபல மனித உரிமை ஆர்வலர் கண்ணபிரான் மரணம்

ஹைதராபாத்,டிச:பிரபல மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான கெ.ஜி.கண்ணபிரான் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான் கடந்த ஆறுமாத காலமாக சிகிட்சைப் பெற்றுவந்தார். நேற்று மாலை மாரத் பள்ளியில் அவருடைய வீட்டில் வைத்து மரணமடைந்தார்.

மக்கள் சமூக உரிமை கழகமான பி.யு.சி.எல்லின் ஸ்தாபகரான கண்ணபிரான் தற்பொழுது அதன் தலைவராகவும் இருந்து வந்தார்.

மனித உரிமை மீறல்களுக்கு பலியாகும் மக்களுக்காக போராடவும், அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கண்ணபிரான் கடந்த 15 ஆண்டுகளாக ஆந்திரபிரதேச சிவில் லிபர்டீஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வந்தார்.

மாவோயிஸ்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் என முத்திரைக்குத்தி போலி என்கவுண்டர்களில் நிரபராதிகளை போலீசார் சுட்டுக் கொல்வதைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட தார்குண்டே கமிட்டி, பார்கவா கமிட்டி ஆகியவற்றில் கண்ணபிரான் உறுப்பினராவார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரபல மனித உரிமை ஆர்வலர் கண்ணபிரான் மரணம்"

கருத்துரையிடுக