1 டிச., 2010

அமெரிக்கா:குண்டுவெடிப்பிற்கு தூண்டிய எஃப்.பி.ஐ

வாஷிங்டன்,டிச.1:கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கார் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதான சோமாலியா வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க இளைஞர் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.

முஹம்மது உஸ்மான் மஹ்மூத் என்ற 19 வயது இளைஞரை எஃப்.பி.ஐ ஸ்டிங் ஆபரேசன் மூலம் சிக்க வைத்துள்ளது.

மஹ்மூதைக் குறித்து சந்தேகம் எழுந்ததால் எஃப்.பி.ஐ ஏஜண்டுகள் போலி குண்டுகளை அவரிடம் கொடுத்து குண்டுவெடிப்பு தூண்டிய பிறகு கைதுச் செய்துள்ளனர்.

முஹம்மதை நிர்பந்தித்து குண்டுவெடிப்பிற்கு தூண்டியதன் மூலம் குற்றங்களை அமெரிக்க அரசு உற்பத்திச் செய்வது நிரூபணமாகியுள்ளது என அவரது வழக்கறிஞர் ஸ்டீஃபன் ஸாடி தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து சிறப்பு உபகரணங்களை அளித்து முஹம்மதை இச்சம்பவத்தில் நிர்பந்தித்துள்ளனர் என அவர் குற்றஞ்சாட்டினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்கா:குண்டுவெடிப்பிற்கு தூண்டிய எஃப்.பி.ஐ"

கருத்துரையிடுக