1 டிச., 2010

இஸ்ரேலின் தடையால் தொடரும் காஸ்ஸாவின் துயரம்

காஸ்ஸா,டிச.1:காஸ்ஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்திய தடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தளர்வு ஏற்படுத்தியுள்ளதாக கூறிய பொழுதிலும் தொடர்ந்து காஸ்ஸா துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஸ்ஸாவிலிருந்து ஏற்றுமதிச் செய்யப்படும் பொருள்களுக்கு தடை விதித்திருப்பதால் பொருளாதாரத்துறை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. காஸ்ஸாவில் செயல்படும் ஆக்ஸ்ஃபாம், ஆம்னஸ்டி, சேவ் தி சில்ட்ரன் உள்ளிட்ட 21 மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள 'எதிர்பார்ப்புகள் அழிகிறது! காஸ்ஸா தடை தொடர்கிறது' என்ற அறிக்கையில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸ்ஸா மக்களுக்கு தேவையான பொருட்களில் நூறில் ஒரு சதவீதப் பொருட்களையே உதவியாக அளிக்க முடிகிறது என ஆக்ஸ்ஃபாம் இண்டர்நேசனலின் இயக்குநர் ஜெர்மி ஹோப்ஸ் தெரிவிக்கிறார்.

இஸ்ரேலின் நடவடிக்கை காஸ்ஸா மக்களுக்கான சுத்தமான குடிநீர், மின்சாரம், வேலை, அமைதியான எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை இழக்கச் செய்கிறது. உணவுப் பொருட்கள் இறக்குமதியில் மாற்றம் ஏற்பட்ட பொழுதிலும் கடந்த 2007 ஆம் ஆண்டு காஸ்ஸாவின் மீது தடைவிதிக்கப்படுமுன் இறக்குமதிச் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் மூன்றிலொரு பகுதி மட்டுமே தற்பொழுது இறக்குமதிச் செய்யப்படுகிறது.

காஸ்ஸாவில் வீடுகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு இஸ்ரேல் ஐ.நாவுக்கு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாட்டினால் ஏழு சதவீத கட்டுமானப் பொருட்களைத்தான் காஸ்ஸாவிற்கு கொண்டுவர ஐ.நாவால் முடிந்துள்ளது. இந்நிலை தொடருமானால் காஸ்ஸாவின் புனர் நிர்மாணத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

பூக்களும், ஸ்ட்ராபர்ரியும் மட்டுமே காஸ்ஸாவிலிருந்து ஏற்றுமதிச் செய்ய அனுமதிக்கப்பட்டவைகளாகும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் தடையால் தொடரும் காஸ்ஸாவின் துயரம்"

கருத்துரையிடுக