20 டிச., 2010

விக்கிலீக்ஸ்:இந்தியா ஈரானுடன் நெருங்காமலிருக்க தொடர்ந்து நிர்பந்தம் அளித்த அமெரிக்கா

புதுடெல்லி,டிச.20:இந்தியா ஈரானுடன் நெருங்காமலிருக்க அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துவந்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் காணப்படுகிறது. புதுடெல்லியில் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல்களில்தான் இச்செய்தி காணப்படுகிறது.

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது பயணத்தின் இடையே இந்தியாவுக்கு வருகைத் தந்தார். சிறிது நேரம் இந்தியாவில் அவர் சிறிது நேரம் தங்கியதற்கு தங்களுடைய கவலையை அமெரிக்க தூதர் டேவிட் முல்ஃபோர்ட் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனுக்கு தெரிவித்திருந்தார் என ஒரு ஆவணம் கூறுகிறது.

நஜாதின் இந்தியா வருகை அமெரிக்காவின் எதிரிகளுக்கு இந்தியா களத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது என முல்ஃபோர்ட் சிவசங்கர் மேனனிடம் தெரிவித்த செய்தியாகும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்த வேளையாகும் அது.

இந்தியா ஈரானுடன் நல்லிணக்கத்தை பேணும் வேளையில் எவ்வாறு அமெரிக்காவுடன் அணுசக்தித் திட்டத்தில் ஒத்துழைக்கும் என்பது ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுடைய சந்தேகமாகும். நஜாதின் வருகை அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற நினைக்கும் காங்கிரஸ் தலைவர்களை பின்வாங்கச் செய்துவிடும் என நினைவுப்படுத்தினார் முல்ஃபோர்ட்.

நஜாதின் வருகையால் நீங்கள் அச்சப்படுவதுபோல் ஒன்றுமில்லை என மேனன் முல்ஃபோர்டிடம் தெரிவித்துள்ளார். இந்தியா எதைச் செய்யவேண்டும் என அமெரிக்கா பகிரங்கமாக கூறுவதைக் குறித்த கவலையை வெளிப்படுத்திய மேனன், இந்தியாவுக்கு என சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை உண்டு என முல்ஃபோர்டுக்கு நினைவூட்டினார்.

இந்தியாவில் ஒரு நிறுவனம் ஈரானுக்கு கிராஃபைட்டை ஏற்றுமதிச் செய்வதை தடைச்செய்ய வேண்டும் என அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை அணுகியிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் செய்தி கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:இந்தியா ஈரானுடன் நெருங்காமலிருக்க தொடர்ந்து நிர்பந்தம் அளித்த அமெரிக்கா"

கருத்துரையிடுக