ஸ்ரீநகர்,டிச.20:விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் கஷ்மீர் பள்ளத்தாக்கில் மனித உரிமை மீறல்களைக் குறித்து சர்வதேச அமைப்புகள் விசாரணை நடத்தவேண்டுமென ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை அமைப்பான செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையைத்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி, ஏசியா வாட்ச் ஆகியன கஷ்மீருக்கு தங்களது குழுவினரை அனுப்பி கஷ்மீர் சிறைகளில் நடக்கும் சித்திரவதைகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என கிலானி தெரிவித்தார்.
கஷ்மீர் விஷயத்தில் சர்வதேச சமூகம் பல வருடங்களாக மெளனம் சாதிப்பது ஆச்சரியமளிக்கிறது. உமர் அப்துல்லாஹ்வின் ஆட்சிக்காலத்தில் சித்திரவதைகள் மட்டுமல்ல, சித்திரவதை மரணங்களும் தாராளமாக நிகழ்ந்துள்ளன என கிலானி குற்றஞ்சாட்டினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:சர்வதேச அமைப்புகள் விசாரணை நடத்த கிலானி கோரிக்கை"
கருத்துரையிடுக