இஸ்லாமாபாத்,டிச.20:இந்தியா பயங்கரவாதத்தை தங்களுக்கு எதிராக பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துகிறது எனவும், கஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் பரிகாரம் காணும் வரை இரு நாடுகளுக்கிடையேயான மோதல் சூழல் தொடரும் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா பயங்கரவாதத்தை பாகிஸ்தானுக்கு எதிராக பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றுக் கூறுவதில் எனக்கு வருத்தமுண்டு. ஆனால், இது நீண்டகாலமாக தொடருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஸல்மான் பஷீர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கிடையே கஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவும் பிரச்சனைகள் உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்வரை பிரச்சனை ஒரு வழியிலிருந்து இன்னொரு வழியில் தொடரும் என ஸல்மான் பஷீர் ஆஜ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுப்பயண வேளையில் சீன பிரதமர் ஜியபாவோ மெளனம் சாதித்தது குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் மோதலை கையாளுவதில் சீனாவின் பங்கினைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் பஷீர் இவ்வாறு தெரிவித்தார்.
பாகிஸ்தான் மும்பை தாக்குதலை வன்மையாக கண்டித்ததோடு இந்தியாவுடன் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கவும் செய்தது. அதனை ஒரு பிரச்சார ஆயுதமாக்க தேவையில்லை. இந்திய ஊடகங்கள் இதனை ஊதிப் பெருக்கினால் அவர்களுக்கு உண்மையை புரியவைக்கும் பொறுப்பு இந்திய தலைவர்களுக்கு உண்டு என ஸல்மான் பஷீர் தெரிவித்தார்.
தீவிரவாதம் ஓர் உள்ளூர் விவகாரம் அல்ல. சர்வதேச பிரச்சனையாகும். பாகிஸ்தானைப் போல் தீவிரவாதத்திற்கு எதிரான திட்டத்தை செயல்படுத்தும் நாடு உலகில் வேறு இல்லை. பாகிஸ்தானை புறக்கணித்துவிட்டு இப்பிராந்தியத்தில் பிரச்சனைக்கு தீர்வு காணவியலாது. தெற்காசியாவில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து முயலவேண்டும். இவ்வாறு ஸல்மான் பஷீர் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பயங்கரவாதத்தை இந்தியா பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துகிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக