20 டிச., 2010

சவூதி மருத்துவமனைகளில் அநாதையான நிலையில் இந்தியர்களின் உடல்கள்

ரியாத்,டிச.20:சவூதி அரேபியாவின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உரிமைக் கோரப்படாத ஏராளமான இந்தியர்களின் இறந்த உடல்கள் ஓர் ஆண்டிற்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகரான ரியாதில் அரசு பிணவறையில் 11 இந்தியர்களின் இறந்த உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், 12 மாதங்களை தாண்டியும் எவரும் இவ்வுடல்களுக்கு உரிமைக்கோரி வரவில்லை.

ஸெமஸி அரசு மருத்துவமனையில் 35 இந்தியர்களின் உடல்களில் 10 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அல் இமாம் மருத்துவமனையில் 4 இறந்த உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் இறந்துபோன உடல்களை அடையாளம் காண்பதற்கு உதவுவதாக சமூக சேவகர்களான மொய்தீன்குட்டி, ஷிஹாப் ஆகியோர் கூறியுள்ளனர்.

இறந்து போனவர்களின் பெயரும், நாடும் மட்டுமே மருத்துவமனை அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் அடையாளம் காண்பதற்கு சிரமமாக உள்ளதாக கேரளாவைச் சார்ந்த மொய்தீன் குட்டி தெரிவிக்கிறார்.

உறவினர்களை தொலைத்தவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்தார். மரணித்தவர்களின் பாஸ்போர்ட் அல்லது வசிப்பிட ஆவணங்களையோ மருத்துவமனை அதிகாரிகள் அளித்தால் அடையாளம் காணம் எளிதாகும் என இந்திய தூதரக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

விபத்துகளிலும், இதர வகையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் மரணிக்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சவூதி மருத்துவமனைகளில் அநாதையான நிலையில் இந்தியர்களின் உடல்கள்"

கருத்துரையிடுக