புதுடெல்லி,டிச.30:பினாயக் சென்னிற்கு தண்டனை விதிக்க சட்டீஷ்கர் நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக்கொண்டது போலீசாரால் சென்னின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு போஸ்ட் கார்ட் கடிதமாகும். இதுதான் அரசுத் தரப்பின் முக்கிய ஆதாரமாகும்.
எவராலும் வாசிக்க இயலாத இக்கடிதத்தை ரகசிய ஆவணம் என போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அக்கடிதத்தில் பினாயக் சென்னை காமரேட்(தோழர்) என சன்யால் அழைக்கிறார். இதுதான் மாவோயிஸ்டுகளுடனான பினாயக்சென்னின் தொடர்புக்கு ஆதாரம் என போலீசார் கூறுகின்றனர்.
சென்னிற்கு எதிரான மற்றொரு ஆதாரம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 8 சி.டிக்களாகும். ஒரு கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மத்தியில் மனித உரிமைக் குறித்து சட்டீஷ்கர் மாநில பி.யு.சி.எல் மனித உரிமைப்பின் உறுப்பினரான சென் உரையாடுவது அந்த சி.டிக்களில் உள்ளது.
பிலாஸ்பூர் சிறையிலிருந்து சன்யால் சென்னிற்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தகைய கடிதங்கள் அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படும். டாக்டரான சென்னிடம் சிகிட்சைக்காக சன்யால் கடிதம் எழுதியுள்ளார். மதர் பர்காதே என்ற நக்ஸல் சிறையிலிருந்து எழுதிய ஒரு ஆங்கில கடிதம், நக்ஸலைட்டுகள் தொடர்பான ஒரு சிறு நூல், பீப்பிள்ஸ் டெமோக்ரெஸியின் சிறப்பு பதிப்பின் ஒரு நகல் ஆகியன சென்னின் ராய்ப்பூர் கோத்தோரா தலபில் அவருடைய எ26-ஆம் நம்பர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களாகும்.
இத்துடன் சென்னின் கம்ப்யூட்டரும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அடங்கும். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை போலீஸாரால் தனது வீட்டிலிருந்து எடுத்ததாக கூறுவது பொய் எனவும், இவை போலீசாரால் போலியாக ஏற்படுத்தப்பட்டவை எனவும் சென் கூறுகிறார்.
2007 மே மாதம் ப்யூஸ் குஹா என்பவரை கைதுச் செய்ததோடு சென்னிற்கு எதிரான வழக்கு துவங்கியது. ராய்ப்பூர் ரெயில்வே நிலையத்தில் வைத்து குஹாவை கைதுச் செய்ததாகவும் அவர் நக்ஸல் தலைவர் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மே 14 ஆம் தேதி சென்னும் கைதுச் செய்யப்பட்டார்.
சிறையிலடைக்கப்பட்டுள்ள நாராயணன் சன்யாலின் கடிதத்துடன் பினாயக் சென்னை காணவந்தார் குஹா என போலீஸ் கூறுகிறது. ஆனால், பீடி இலை வியாபாரம் செய்யும் குஹா வியாபாரத்திற்காக ராய்ப்பூர் வந்ததாக அவருடைய வழக்கறிஞர் கூறுகிறார்.
குஹா தங்கியிருந்த மஹேந்திர ஹோட்டலிலிருந்து மே ஒன்றாம் தேதி கைதுச் செய்துவிட்டு ரகசிய இடத்தில் கொண்டுசென்ற போலீசார் மே 6-ஆம் தேதி கைதுச் செய்ததாக பதிவுச்செய்தனர். இத்துடன் நிர்பந்தப்படுத்தி சில காகிதங்களில் கையொப்பம் பெற்றுள்ளனர்.
குஹாவை தெரியாது என சன்யால் கூறுகிறார். தனக்கு சன்யாலையோ, சென்னையோ தெரியாது எனவும் கொல்கத்தா செல்ல மே 2-ஆம் தேதி டிக்கெட் பதிவுச் செய்திருந்ததாகவும் குஹா கூறுகிறார்.
முதலில் ஆந்திர மாநிலத்தில் தனக்கெதிராக வழக்கை பதிவுச் செய்தார்கள். அதில் ஜாமீன் கிடைத்தபொழுது தந்தெவாதாவில் இன்னொரு பொய் வழக்கு பதிவுச் செய்தனர். அதில் ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாததால் தற்பொழுது இவ்வழக்கில் சிக்கவைத்துள்ளனர் எனவும், தான் நக்ஸல் அல்ல எனவும் குஹா கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பினாயக் சென்னிற்கெதிரான ஆதாரம் - போஸ்ட் கார்ட் கடிதம்"
கருத்துரையிடுக