ஜெய்ப்பூர்,டிச.30:ராஜஸ்தான் மாநில அரசு விடுத்த கோரிக்கையை புறக்கணித்துவிட்டு குஜ்ஜார்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
10-வது நாளாக நேற்றும் ரெயில்-சாலை போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. அதேவேளையில், போராட்டம் தொடர்பாக குஜ்ஜார் தலைவர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு அரசு மற்றும் குஜ்ஜார் போராட்ட தலைவர்களிடையே பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
அரசு வேலைகளில் ஐந்து சதவீத இடஒதுக்கீட்டைக் கோரி குஜ்ஜார்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். கோரிக்கை ஏற்கபடாதவரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என்பது குஜ்ஜார்களின் நிலைப்பாடு. ஒருதலை பட்சமான தீர்மானங்கள் எதுவும் எடுக்கக்கூடாது என குஜ்ஜார் போராட்டத் தலைவர் கிரோரிசிங்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை ஏற்கபட்டால்தான் ரெயில் தண்டவாளங்களிலிருந்து மாறுவோம் என அவர் அறிவித்துள்ளார். குஜ்ஜார் இனத்தைச் சார்ந்த ராஜஸ்தான் மாநில அமைச்சர் டாக்டர்.ரூப்சிங் போராட்டக்காரர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
குஜ்ஜார்களின் கோரிக்கையை அரசு தயார் என்றும், ஆனால் இதுத்தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வராததால் எந்த முடிவும் எடுக்கமுடியாது என அவர் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார். போராட்டத்தை வாபஸ் பெற அமைச்சர் கோரிக்கை விடுத்தபோதிலும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.
கோரிக்கையை அங்கீகரிக்க மாநில அரசுக்கு குஜ்ஜார் தலைவர் கிரோரிசிங் 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இதற்குள் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் வலுப்பெறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் அசோக் கெலாட்டும், உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவாலும் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு போராட்டத்தை வாபஸ்பெற குஜ்ஜார்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரத்பூர், தவ்ஸா, கரவ்லி, டோல்பூர், ஸவாய் மடோபூர் மாவட்டங்களில் ரெயில்-சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை சிக்கலாகியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குஜ்ஜார்களின் போராட்டம் தொடர்கிறது: தலைவர்களிடையே கருத்து வேறுபாடு"
கருத்துரையிடுக