30 டிச., 2010

பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை: நம்பமுடியாத கொடுமை - நோம் சோம்ஸ்கி, ரொமீலா தாப்பர்

புதுடெல்லி,டிச.30:மனித உரிமை ஆர்வலரும், பிரபல மருத்துவருமான பினாயக்சென்னிற்கு சட்டீஷ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளதை பிரபல சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கியும், பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பரும் அடங்கிய அறிவு ஜீவிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நம்பமுடியாத கொடுமை பினாயக் சென்னிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என குறிப்பிட்டுள்ளனர்.

பினாயக் சென்னை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும், உயர்நீதிமன்றம் அவருடைய மேல்முறையீட்டில் விரைவாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசத் துரோகம் குற்றம் சுமத்தி சென்னிற்கு தண்டனை வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சிகரமானதாகும். சென் எவர் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. எவரையும் தாக்குதல் நடத்த தூண்டவில்லை. தேசத்தின் அரசியல் சட்டத்திற்கு எதிராக எவ்வித ரகசிய ஆலோசனையும் நடத்தவில்லை. அத்தகைய இயக்கங்களுடன் அவருக்கு தொடர்பில்லை. மாறாக, மருத்துவர் என்ற நிலையில் அவர் மக்களுக்கு பரிபூரணமான சேவைகளில் ஈடுபட்டார். ஏராளமானோரின் உயிரை காப்பாற்றியவர். ஏழைகளின் உரிமைக்காக மனித உரிமை ஆர்வலர் என்ற நிலையில் பணியாற்றினார் சென் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை: நம்பமுடியாத கொடுமை - நோம் சோம்ஸ்கி, ரொமீலா தாப்பர்"

கருத்துரையிடுக