கொச்சி,டிச.13:கேரள மாநில களமசேரியில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை விசாரணைச் செய்ய மத்திய அரசு தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அப்துல் நாஸர் மனைவி ஸூஃபியா உள்பட இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 13 நபர்களையும் விசாரணைச்செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவு இம்மாதம் 7-ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ஸூஃபியா பஸ் எரிப்பு வழக்கில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு ஏஜன்சி என்.ஐ.ஏ சமர்ப்பித்த மிக ரகசியமான அறிக்கையின் அடிப்படையில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ கொச்சியில் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்கும்.
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி இவ்வழக்குத் தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. கோயம்புத்தூர் குற்றவாளியாக்கப்பட்ட அப்துல்நாஸர் மஃதனியின் விடுதலைக்காக இந்த பஸ் எரிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக தடியன்ற விட நஸீர் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஸ் எரிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்கள் கோயம்புத்தூர் சிறையிலிருந்த அப்துல்நாஸர் மஃதனியுடன் உரையாடினார்கள் எனக்குற்றஞ்சாட்டி மஃதனியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், தொலைபேசி உரையாடல் நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் மஃதனி நீக்கப்பட்டார் எனக் கருதப்படுகிறது.
பல்வேறு புலனாய்வு துறைகளால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில் துவக்கத்தில் ஷெரீஃப் என்பவர் முதல் குற்றவாளியாக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் ஸூஃபியா கடந்த 2009 டிசம்பர் 17-ஆம் தேதி கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "களமசேரி பஸ் எரிப்பு வழக்கு:அப்துல் நாஸர் மஃதனியின் மனைவியை விசாரணைச்செய்ய மத்திய அரசு அனுமதி"
கருத்துரையிடுக