மஞ்சேரி,டிச.13:பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு பெங்களூர் சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனியை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டுமென ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் 14-வது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கர்நாடகா அரசை வலியுறுத்தியுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மஃதனி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஸ்ரீராம சேனா போன்ற ஹிந்துத்துவா அமைப்புகளின் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளையும், ஊழலில் மூழ்கியுள்ள பா.ஜ.க அரசின் மோசமான நிலையை மறைக்கவும் கர்நாடக அரசு பெங்களூர் குண்டுவெடிப்பின் பெயரால் முஸ்லிம்களை வேட்டையாடுகிறது.
முன்பும் இதுபோல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்ட அப்துல்நாஸர் மஃதனி ஒன்பது வருடங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்தார். அவருடைய விடுதலைக்காக கேரள மாநில சட்டசபைக்கூட கண்டனம் தெரிவித்திருந்தது. நீண்ட சட்டரீதியான போராட்டத்திற்கு பின்னர் அவர் விடுதலைச் செய்யப்பட்டார்.
அனைத்து அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மஃதனியின் விடுதலைக்காக கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
சிறுபான்மை மக்களின் பிற்போக்கு நிலையை போக்குவதற்கு மிஷ்ரா-சச்சார் கமிஷன்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராகவேண்டும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளாத அரசியல்வாதிகளை கவனத்தில்கொண்டு தேர்தலில் அவர்களை புறக்கணிக்க அழைப்பு விடுப்போம்.
பாரக் ஒபாமாவின் இந்தியா சுற்றுப்பயணமும், பிரதமருடனான சந்திப்பும் சந்தேகத்தை கிளப்புகின்றன. சமமான நீதியும், பாதுகாப்பும் முஸ்லிம்களுக்கு உறுதிச்செய்ய அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு மில்லி கவுன்சில் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் - மில்லி கவுன்சில்"
கருத்துரையிடுக