ஹைதராபாத்,டிச:2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ உடனடியாக குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்கும்.
தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் என மூத்த சி.பி.ஐ அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
குப்தாவும், சர்மாவும் 2007 ஆம் ஆண்டு அஜ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கிலும் ஏ.டி.எஸ் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையிலும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டிருந்தனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்துபேர் மரணித்தனர். இவ்வழக்கில் ஆறு பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஹிந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தூரைச் சார்ந்த சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்ற ராம்ஜி ஆகிய குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை. இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். ஆறாவது குற்றவாளி சுவாமி அஸிமானந்தா என்ற நபகுமார் சர்க்கார் கடந்த மாதம் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார். அஸிமானந்தா தற்பொழுது சி.பி.ஐயின் காவலில் உள்ளார்.
டாங்கே மற்றும் கல்சங்கரா குறித்த விபரங்கள் கிடைப்பதற்காக அஸிமானந்தாவை சி.பி.ஐ விசாரித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:குற்றப்பத்திரிகை உடனடியாக சமர்ப்பிக்கப்படும்"
கருத்துரையிடுக