21 டிச., 2010

ஜூலியன் அஸென்ஜே ஹைடெக் பயங்கரவாதி - அமெரிக்க துணை அதிபர்

வாஷிங்டன்,டிச.21:விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜே ஹைடெக் பயங்கரவாதி என அமெரிக்க துணை அதிபர் ஜோஸஃப் பைடன் தெரிவித்துள்ளார்.

அஸென்ஜே உலக மக்களின் வாழ்க்கையையே ஆபத்தில் ஆழ்த்திவிட்டார். அவருக்கெதிராக என்ன வழக்கை தொடுக்கலாம் என வாஷிங்டன் ஆலோசித்து வருவதாக பைடன் தெரிவித்தார்.

பெண்டகனின் ரகசிய ஆவணங்களை (வியட்நாம் போர் ரகசியங்கள்) வெளியிட்டவர்களைவிட அஸென்ஜே மிகப்பெரிய ஹைடெக் பயங்கரவாதியாவார். என்.பி.சி செய்தி நிறுவனத்தின் இதுத்தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவே இதனை பைடன் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் மக்களின் தொழிலும், வாழ்க்கையும் தகர்த்து ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார் அஸென்ஜே. எங்களின் நண்பர்களையும், நட்பு நாடுகளையும் விக்கிலீக்ஸின் தகவல்கள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. அஸென்ஜேவின் மீது சட்டநடவடிக்கை எடுப்பதுக் குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தனது சுதந்திரத்திற்கு அதிக ஆயுள் இல்லை என அஸென்ஜே நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அஸென்ஜேவை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து சிறையிலடைப்பதற்கு முன்னோடியாக பைடனின் இவ்வறிவிப்பு கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜூலியன் அஸென்ஜே ஹைடெக் பயங்கரவாதி - அமெரிக்க துணை அதிபர்"

கருத்துரையிடுக