27 டிச., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் நான்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டன

புதுடெல்லி,டிச.27:அஜ்மீர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் நான்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்களை ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை வெளியிட்டுள்ளது.

பாவேஷ், திவேஷ், ஸன்னி, மேஹுல் ஆகியோர்தான் அந்த பயங்கரவாதிகள்

குண்டுவெடிப்புக்காக பயன்படுத்திய கார் மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் என்ற இடத்தைச் சார்ந்த ஆனந்த் ராஜ் கட்டாரா என்பவருடையது. தேவாஸைச் சார்ந்தவரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான சுட்டுக்கொல்லப்பட்ட சுனில் ஜோஷிதான் இக்காரை பயன்படுத்தியுள்ளார்.

குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹர்ஷத் பாய் சோலங்கிக்கு ஜோஷியின் கொலையில் பங்குள்ளது தெளிவாகியுள்ளது.

குஜராத் இனப்படுகொலையில் பெஸ்ட் பேக்கரி கூட்டுப் படுகொலையில் முக்கிய குற்றவாளி சோலங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாரே ஜோஷி கொலை வழக்கிலும், சோலங்கி வெடிக்குண்டு வழக்கிலும் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரகசியம் வெளியே கசியாமலிருக்க சுனில் ஜோஷியை அவரது சகாக்களான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளே கொன்றுள்ளனர்.

சுனில் ஜோஷியின் கொலையை விசாரித்துவரும் புலனாய்வுக் குழுதான் இந்தூரிலிருந்து காரை மீட்டனர் என தீவிரவாத எதிர்ப்பு கூடுதல் எஸ்.பி சத்யேந்திர சிங் ரன்வாத் தெரிவித்தார். இதே வாகனத்தில்தான் ஜோஷியை கொலைச் செய்வதற்கு வந்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி குற்றத்தை நிகழ்த்திய பின்னர் பயங்கரவாதிகள் அதே காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதனை ஜோஷியின் கொலையை விசாரிக்கும் மத்தியபிரதேச போலீஸ் அதிகாரி வினோத் சிங் குஷ்வஹ் தெரிவித்துள்ளார்.

அஜ்மீரில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக தயார் செய்த வெடிப்பொருட்களை கட்டாரேயும், ஜோஷியும் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் காரில் குஜராத் மாநிலம் கோத்ராவிற்கு கொண்டுவந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து பாவேஷ், திவேஷ், ஸன்னி, மேஹுல் இவ்வழக்கில் ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட முகேஷ் வஸானி ஆகியோர் சேர்ந்து அஜ்மீருக்கு வந்துள்ளனர்.

வெடிக்காத குண்டை வைத்தது முகேஷ் வஸானியாவார். பின்னர் காரை கட்டாரே விற்றுவிட்டார். காரின் மூன்றாவது உரிமையாளரிடமிருந்துதான் அதனை மீட்டுள்ளனர் போலீசார்.

இவ்வழக்கில் கூடுதல் விபரங்கள் கிடைப்பதற்காக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அஸிமானந்தாவிடம் விசாரணை நடத்தவும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை முடிவுச் செய்துள்ளது. இதற்கான வாரண்டை அஜ்மீர் முதன்மை ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து ஏ.டி.எஸ் பெற்றுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் நான்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டன"

கருத்துரையிடுக