27 டிச., 2010

டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை: ஆம்னஸ்டி எதிர்ப்பு

லண்டன்,டிச.27:மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கு சட்டீஷ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்து தீர்ப்பு கூறியதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை ராய்ப்பூர் நீதிமன்றம் மீறிவிட்டதாக ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது. பினாயக் சென்னின் மீதான விசாரணை அரசியல் ரீதியிலானதாகும். சென்னின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை வாபஸ் பெறவேண்டும். இதனை ஆம்னஸ்டியின் ஆசியா-பசிபிக் இயக்குநர் ஸாம் ஸெரிஃபி வலியுறுத்தியுள்ளார்.

சென்னிற்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக சட்டீஷ்கர் அதிகாரிகள் மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கட்டும் என ஸாம் ஸெரிஃபி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை: ஆம்னஸ்டி எதிர்ப்பு"

கருத்துரையிடுக