புதுடெல்லி/நியூயார்க்,டிச.27:மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக் சென்னிற்கு சட்டீஷ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்பு நீதியை மறுப்பதாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்ட அறிக்கையில் அக்கட்சியின் தேசிய செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா கூறியிருப்பதாவது: மனித உரிமை ஆர்வலர்களையும், எங்கள் கட்சித் தொண்டர்களையும் போலீஸ் குறிவைத்துள்ளது. அவர்களுக்கெதிராக பொய்வழக்கை சுமத்திவருகிறது. டாக்டர்.சென்னிற்கு பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும். கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதியின் தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பினாயக் சென்னிற்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் நீதியை கொலைச் செய்தது போன்றதாகும். பினாயக் சென்னிற்கு விடுதலைக் கிடைக்க ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைவரும் அணிதிரள வேண்டுமென அசோசியேசன் ஃபார் ப்ரொடக்ஷன் ஆப் டெமோக்ரேடிக் ரைட்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ராய்ப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியடையவைத்துள்ளது என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார். டாக்டருக்கு ஆயுள்தண்டனை விதித்தது சாதாரண ஆதாரங்களின் அடிப்படையிலாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார் நீதிபதி. நீதிமன்றத்தின் தீர்ப்பு நாகரீகமற்றது என சோலி சோராப்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தவர்களெல்லாம் சொகுசாக வாழும்பொழுது இந்த தேசத்தில் ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது துரதிர்ஷ்டவசமானதாகும் என பிரபல ஆவண பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டாக்டர் பினாயக் சென்னையும் இதர இருவரையும் நீதிமன்றம் தண்டனை வழங்கியதற்கு நியூ ட்ரேட் யூனியன் இன்ஷியேட்டிவ் கண்டனம் தெரிவித்துள்ளது. குடிமக்களுக்கான உரிமையை பாதுகாக்கும் விதமாக இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடுச் செய்ய மத்திய அரசுக்கு இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
டாக்டர் சென்னிற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பை நிரூபிப்பதற்கு அவருடைய மனைவி இலீனா டெல்லி தலைமையகமாகக் கொண்ட இந்தியன் சோஷியல் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பிய மின்னஞ்சலை ஆஜர்படுத்தியுள்ளனர். இது போலீஸ் விசாரணையின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி என சென்னையில் மஸ்தூர் கிஸ்ஸான் சக்தி சங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
டாக்டர் பினாயக் சென்னிற்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்ததை எதிர்த்து அமெரிக்காவின் ஹாவட் சதுக்கத்தில் கண்டன பேரணி நடைபெற்றது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இப்பேரணியில் கலந்துக் கொண்டனர்.
பினாய்க் சென்னை தண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதாரங்கள் எதுவும் அவருக்கெதிராக இல்லை எனவும் பி.யு.சி.எல் செயலாளர் மஹிபால்சிங் தெரிவித்தார். இந்திய ஜனநாயகத்தின் துயரமான தினம் இத்தீர்ப்பு வந்த நாள் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்பாராததும், அநியாயமான தீர்ப்பு இது என பினாயக் சென்னிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறித்து கருத்துத் தெரிவித்த சென் விடுதலை கமிட்டி புனேயில் தெரிவித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை: எதிர்ப்பு வலுக்கிறது"
கருத்துரையிடுக