27 டிச., 2010

ஜூலியன் அஸென்ஜே சுயசரிதை எழுதுகிறார்

லண்டன்,டிச.27:விக்கிலீக்ஸை தொடர்ந்து நடத்தவும், நீதிமன்ற செலவுகளை சமாளிக்கவும் தனது சொந்த வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிடவிருக்கிறார் விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜே.

15 லட்சம் டாலர் தொகை இதன் வெளியீட்டு உரிமைக்காக பெறப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் கானல்கேட், அமெரிக்காவில் ஆல்ஃப்ரட் எ நோத் ஆகிய நிறுவனங்களுக்கு நூல் வெளியீட்டு உரிமை வழங்கப்படும். தனது சொந்த வரலாற்றுடன், விக்கிலீக்ஸ் கசியவிட்டது தொடர்பான செய்திகளும் இதில் உட்படும் என அஸென்ஜே தெரிவித்துள்ளார்.

சுயசரிதையை எழுத வேண்டுமென்ற விருப்பத்தினால் அல்ல, மாறாக அத்தியாவசியமானதால் எழுதுகிறேன் என அவர் சண்டே டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் சுவீடன் இளம்பெண்கள் அளித்த புகார் தொடர்பான நீதிமன்ற செலவுக்காக இதுவரை இரண்டு லட்சம் பவுண்டிற்கு அதிகமான செலவுகள் ஏற்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனக்கெதிராக பொருளாதார போரை பிரகடனப்படுத்திய சூழலில் விக்கிலீக்ஸை தொடர்ந்து நடத்த இதுவல்லாமல் வேறு வழி இல்லை என அவர் தெரிவித்தார்.

பாலியல் பலாத்கார வழக்கில் லண்டனில் வைத்து கைதான ஜூலியன் அஸென்ஜெ பின்னர் ஜாமீனில் விடுதலையானார். தன்னை சுவீடனிடம் ஒப்படைப்பதை என்னவிலை கொடுத்தும் எதிர்ப்பேன் என அஸென்ஜே தெரிவித்தார். சுவீடனிடம் ஒப்படைத்தால் அவர்கள் அமெரிக்காவிடம் என்னை ஒப்படைப்பது உறுதி. பின்னர் நான் வெளிச்சத்தை காணமாட்டேன். சுயசரிதை எழுதுவதற்கான ஒப்பந்தம் தனக்கு கிடைத்த புதுவருட பரிசு என அஸென்ஜே தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜூலியன் அஸென்ஜே சுயசரிதை எழுதுகிறார்"

கருத்துரையிடுக