புதுடெல்லி,டிச.16:கேரள மாநிலம் தொடுபுழாவில் நியூமென் கல்லூரி பேராசிரியர் டி.ஜே.ஜோசப் நபிகளாரை அவமதித்து வினாத்தாள் தயாரித்தக் காரணத்தினால் சில நபர்களால் கைவெட்டப்பட்டார்.
இவ்வழக்கில் போலீசார் டாக்டர் ரெனீஃப் என்பவரை இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு மருத்துவ சிகிட்சை அளித்தார் எனக் குற்றஞ்சாட்டி கைதுச் செய்திருந்தனர்.
இந்நிலையில், கேரள மாநில உயர்நீதிமன்றம் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டாக்டர்.ரெனீஃபின் சார்பாக சத்தியப் பிரமாணம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் டாக்டர் ரெனீஃப், சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு மருத்துவ சிகிட்சை அளித்தது எனது தொழில் தர்மமாகும். மனிதநேயத்தை மட்டுமே நான் நிறைவேற்றியுள்ளேன். நான் மட்டுமல்ல, எனது தந்தை, எனது மனைவியும் மருத்துவர்களாவர். நாங்கள் இதுவரை எந்த குற்றவியல் வழக்கிலும் சம்பந்தப்படவில்லை.
மாநிலத்தில் நடந்த இதைப் போன்ற இதர கைவேட்டு சம்பவங்களில் இவ்வழக்கைப்போல் மாநில அரசு நடந்துக்கொள்ளவில்லை. இதைப் போன்றதொரு சம்பவம், கடந்த ஜூலை நான்காம் தேதி செங்கன்னூர் என்ற இடத்தில் நடந்தது. பிரபல தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் 12 பேர் சேர்ந்து அபிலாஷ் என்பவரின் கையை வெட்டினர். இவ்வழக்கில் இரண்டுபேர் மட்டுமே கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனுவை அரசு எதிர்க்கவில்லை. இவ்வாறு டாக்டர் ரெனீஃப் சத்திய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஜாமீனை ரத்துச் செய்வதற்கான கேரள அரசின் முயற்சிக்கெதிராக டாக்டர் ரெனீஃப்"
கருத்துரையிடுக