16 டிச., 2010

கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி,டிச.16:ஆஸ்திரேலிய மிஷினரி பணியாளர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது குழந்தைகளை கொடூரமாக தீவைத்துக் கொளுத்திக் கொலைச்செய்த வழக்கில் குற்றவாளியான தாராசிங்கிற்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனக்கோரிய சி.பி.ஐயின் மனுவில் தீர்ப்பளிப்பதை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 1999 ஜனவரி மாதம் ஒரிஸ்ஸாவில் ஒரு கிராமத்தில் வைத்து ஸ்டெயின்ஸும் அவரது குழந்தைகளும் ஒரு காரில் வைத்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்யப்பட்டனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தாரா சிங் மற்றும் மஹேந்திர ஹெப்ரு ஆகியோருக்கு ஒரிஸ்ஸா மாநில செசன்ஸ் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், ஒரிஸ்ஸா மாநில உயர்நீதிமன்றம் மரணத் தண்டனையை ரத்துச்செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்தது. விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையையும் உயர்நீதிமன்றம் ரத்துச் செய்திருந்தது.

இதனை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு"

கருத்துரையிடுக