4 டிச., 2010

டெஹல்கா நிரூபர் ஷாஹினாவுக்கு எதிரான நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது: என்.சி.ஹெச்.ஆர்.ஓ

கொச்சி,டிச.4:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களை நேரடியாக பேட்டியெடுத்ததற்காக கர்நாடக போலீசார் வழக்கு பதிவுச் செய்தது பத்திரிகைப் பணியின் மீதான அத்துமீறலும், மனித உரிமை மீறலுமாகும் என மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் கேரள மாநிலத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர்களான அஹ்மத் ஷெரீஃப் மற்றும் ரெனி ஐலின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷாஹினா தனது பத்திரிகைத்துறை தர்மத்தை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் அவர் மீது வழக்குத் தொடர்வது பாசிச நடவடிக்கை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெண்மணியொருவரை அவருடைய தொழில் ரீதியான நேர்மையை தவறாக விளக்கி தளர்வடையச்செய்து மனோரீதியான சித்தரவதைக்கு உள்ளாக்குவது மனித உரிமைகள் மீது விடுக்கப்பட்ட சவாலாகும்.

பொய் சாட்சிகளை காட்டி மஃதனியை வழக்கி சிக்கவைக்க கர்நாடகா போலீஸ் நடத்திய நாடகம் வெளியான நிலையில் தங்களது கோபத்தை தீர்ப்பதற்காக நடத்தும் வெறுக்கத்தக்க முயற்சிகளை ஜனநாயகவாதிகள் அனுமதிக்கக் கூடாது என என்.சி.ஹெச்.ஆர்.ஓ வலியுறுத்தியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெஹல்கா நிரூபர் ஷாஹினாவுக்கு எதிரான நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது: என்.சி.ஹெச்.ஆர்.ஓ"

கருத்துரையிடுக