4 டிச., 2010

வீணாகும் நம்பிக்கை:எஸ்.ஐ.டியின் அறிக்கையில் மோடி பரிசுத்தவானாம்!

புதுடெல்லி,டிச.4:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையைக் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு இஹ்ஸான் ஸாப்ரி வழக்கில் மோடிக்கு பரிசுத்தவான் சான்றிதழ் வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருவாரத்திற்கு முன்பு முத்திரைவைக்கப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையில் மோடிக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் ஒன்றுமில்லை என எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளதாக தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

குல்பர்கா சொசைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃபிரி தாக்கல் செய்த வழக்கில்தான் எஸ்.ஐ.டி விசாரணையை பூர்த்தியாக்கி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கலவரக்காரர்களை விரட்ட வந்த போலீசாரை மோடி தலையிட்டு தடுத்ததாகவும், அக்கிரமங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் மோடியை எஸ்.ஐ.டி ஒன்பது மணிநேரம் விசாரணைச் செய்திருந்தது. கலவரத்தில் மோடிக்கு பங்கில்லை என்பதை நிரூபிக்க கடந்த எட்டு ஆண்டுகளாக அரசு முயற்சித்து வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தோஜி தெரிவிக்கிறார்.

கலவரம் துரதிர்ஷ்டவசமானதாகும். ஆனால், மோடி திட்டமிட்டார் என்று கூறுவது தவறு என முகுல் கூறுகிறார். எஸ்.ஐ.டி அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததொரு விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதாக மாநிலங்களவை எதிர் கட்சித் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான அருண் ஜெட்லி கூறுகிறார். இவ்விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளதால் இதுக்குறித்து மேலும் எதனையும் கூற விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டத்துடன் ஒத்துழைப்பது என்ற கொள்கையைத்தான் பா.ஜ.க மேற்கொண்டதாகவும், சட்டத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான ஷானவாஸ் ஹுசைன் தெரிவிக்கிறார்.

அதேவேளையில், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த முத்திரை வைத்த உறையில் அளிக்கப்பட்ட தகவல் எவ்வாறு கசிந்தது? என்பதைக் குறித்து தெரியவேண்டும் என சி.பி.எம்மின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரட் கூறுகிறார். ஆனால், பத்திரிகைச் செய்திகளுக்கு பதில் கூற மோடி மறுத்துவிட்டார்.

2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இஹ்ஸான் ஜாஃப்ரி கொடூரமாக பாசிச பயங்கரவாதிகளால் கொலைச் செய்யப்பட்டார். ஸாகியாவின் புகாரின் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது. மோடி உள்பட அமைச்சரவை உறுப்பினர்கள், போலீஸ் துறையில் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் மீது ஸாகியா புகார் அளித்திருந்தார். குல்பர்கா சொசைட்டி கொடூர கூட்டுப் படுகொலையில் மட்டும் 69 பேர் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வீணாகும் நம்பிக்கை:எஸ்.ஐ.டியின் அறிக்கையில் மோடி பரிசுத்தவானாம்!"

கருத்துரையிடுக