டிசம்பர் மாதம் என்றாலே எதிரியின் அராஜகமும் இயற்கையின் சீற்றமும் தான் நமக்கு ஞாபகம் வருகிறது.
கடந்த டிசம்பர்-26 அன்று 'பிக்சிட்டி' என்று அழைக்கப்படும் பெரியபட்டிணத்தில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்தது. அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் ஷஹீத் அந்தஸ்தை கொடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்தின் போது சில பெண்களின் வீரம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹபீப் நிஸா(38) என்ற தாய் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் நீச்சலடித்து காப்பாற்றி விட்டு தான் மரணித்துவிட்டார்கள் என்பதை கேட்கும்போது நமக்கு உண்மையில் ஒரு வீர உணர்வு மேலெழும்புகிறது.
ஆண் மக்களே கடலில் இறங்க தயங்கும் நேரத்தில் ஒரு பெண் தனியாக தனது 4 குழந்தைகளையும் காப்பாற்றியது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
அதேபோல் ஷர்மிளா(35) என்ற வீரமங்கை தன் 8 மாத கைக்குழந்தையை காப்பாற்றி தானும் தப்பிவந்த சம்பவம் முஸ்லிம் பெண்களின் வீரத்தை பரைசாற்றுகிறது.
இன்னும் சில பெண்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரியபட்டிணம் என்றாலே வீரம் செறிந்த மண் என்பார்கள். அதை இவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.
இச்சம்பவத்தினை நினைக்கும் போது நவம்பர்-25,2009 ல் சவூதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேரை காப்பாற்றி தன் உயிரைவிட்ட பாகிஸ்தானை சேர்ந்த வீரர் ஃபர்மான்(32) தான் நம் ஞாபகத்துக்கு வருகிறார்.
வீரம் என்பது அல்லாஹ் நமக்கு கொடுத்த சொத்து. அதை முறையாக நாம் பயன்படுத்தினால் அல்லாஹ் நமக்கு கண்ணியத்தையும், நல்வாழ்க்கையையும் பரிசாக கொடுப்பான்.

--ரியாஸ்.பெரியபட்டிணம்--
3 கருத்துகள்: on "வீரத் தாய்மார்கள்"
WE need to ask PPM town people to organize to get Gallantry Award for this mother.
அல்லாஹ் மரணித்தவர்களின் பாவங்களை மன்னித்து உயிர்தியாக அந்தஸ்தை அளிப்பானாக! ஆமீன்!
குடும்பத்தின் ஆணிவேர் பெண்கள்.
சகோதரிகளே நீடூடி வாழ்க,
இழந்த உங்கள் சுற்றத்திக்கு பரிகாரம் இறைவன் உங்களுக்கு சுவனத்தில் வழங்க வேண்டுகிறேன்
கருத்துரையிடுக