கராக்கஸ்,டிச.30:அமெரிக்காவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதில் வெனிசுலாவுக்கு தடையேதுமில்லை என அந்நாட்டு அதிபர் ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார்.
வெனிசுலாவிற்கான அமெரிக்க தூதராக லாரி பாமரை அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆகஸ்ட் மாதம் முன்மொழிந்திருந்தார். லாரி பாமர் அமெரிக்க செனட்டில் வெனிசுலாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை எழுப்பியவராவார். அண்டை நாடான கொலம்பியாவில் இடதுசாரி கிளர்ச்சியாளர்களுடன் சாவேஸின் அரசுக்கு தொடர்பிருப்பதாக பாமர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அவரை வெனிசுலாவின் அமெரிக்க தூதராக நியமித்தது இரு நாடுகளிடையேயான தூதரக உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுத்தொடர்பாக வெனிசுலாவின் தேசிய தொலைக்காட்சியில் பேட்டியளித்த சாவேஸ், அமெரிக்காவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதிலும், வாஷிங்டனிலுள்ள வெனிசுலாவின் தூதரை திரும்ப அழைப்பதிலும் வெனிசுலாவிற்கு எந்த தடையுமில்லை என அறிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமெரிக்காவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதில் தடையேதுமில்லை - ஹியூகோ சாவேஸ்"
கருத்துரையிடுக