30 டிச., 2010

விக்கிலீக்ஸ்:ஹமாஸ் கமாண்டரின் கொலையை மறைத்துவைக்க யோசித்த யு.ஏ.இ

துபாய்,டிச.30: ஹமாஸ் கமாண்டர் மப்ஹூஹ்வின் கொலையை மறைத்துவைக்க யு.ஏ.இ ஆலோசித்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

ஆனால், கொலையை மறைத்தால் அது இஸ்ரேலுக்கு உதவுவதாக அமையும் என்பதனால் பின்னர் வெளிப்படுத்த முடிவெடுக்கப்பட்டது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட யு.ஏ.இ அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கம்பி வடத்தகவல் கூறுகிறது.

துபாயில் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்த ஹமாஸின் மூத்த கமாண்டர்களில் ஒருவரான மப்ஹூஹ் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாத் ஏஜண்டுகளால் கடந்த ஜனவரியில் கொல்லப்பட்டார். மப்ஹூஹ் கொலையில் ஈடுபட்ட மொசாத் ஏஜண்டுகள் போலி பாஸ்போர்ட்டில் துபாய் வந்தது கண்டறியப்பட்டது.

யு.ஏ.இயின் அமெரிக்க தூதர் ரிச்சார்டு ஓஸ்லான் யு.ஏ.இயின் ஊடக ஆலோசகருடன் நடத்திய உரையாடலைத்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் கமாண்டர் கொலைத் தொடர்பாக இரண்டு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஒன்று, கொலையை முற்றிலும் மறைத்துவைப்பது, இரண்டாவதாக வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தைக் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பது.

ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களைக் குறித்து பதிலளிக்க யு.ஏ.இ ஊடக அலுவலகம் மறுத்துவிட்டது. ரகசிய ஆவணங்களை ஆய்வுச் செய்வதாக அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:ஹமாஸ் கமாண்டரின் கொலையை மறைத்துவைக்க யோசித்த யு.ஏ.இ"

கருத்துரையிடுக