டெஹ்ரான்,டிச.7:அணு ஆயுதங்களின் காலம் கழிந்துவிட்டதாகவும், அமெரிக்க ஆப்கன், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நடத்திய போர்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாதது இதனை தெளிவுப்படுத்துவதாகவும் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் டெஹ்ரானில் ஒரு மாநாட்டில் உரையாற்றும் பொழுது குறிப்பிட்டார்.
மேற்கத்திய சக்திகளிடம் ஏராளமான அணுகுண்டுகள் உள்ளன. பின்னர் ஏன் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக ஈரான் அணுஆயுதம் நிர்மாணிக்கு விவகாரத்தில் கவலை கொள்கின்றனர்?என நஜாத் கேள்வி எழுப்பினார்.
மேற்கத்திய சக்திகளுக்கு ஏதோ சிறப்பான திறமைகளும், பதவிகளும் உண்டு என சிலர் கருதுகின்றனர். ஆனால், பொருளாதார நெருக்கடியை சந்தித்த பொழுது என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம் எனவும் நஜாத் கூறினார்.
கடந்த வாரம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்த நஜாத், 'ஈரானின் செயல்பாடுகளைக் குறித்து அமெரிக்கா அஞ்சுகிறது. எங்களின் செயல்பாடுகளில் மிரண்டுபோன அமெரிக்கா அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்கிறது' என குற்றஞ்சாட்டினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அணு ஆயுதங்களின் காலம் கடந்துவிட்டது - அஹ்மத் நஜாத்"
கருத்துரையிடுக