7 டிச., 2010

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் உரிமையில் விதிமுறை மாற்றம் தேவை

துபாய்,டிச.7:வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் விதிமுறையை மாற்றவேண்டும். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலச்சங்கம் சனிக்கிழமை இந்திய தேர்தல் கமிஷனுக்கு முறையீடு அனுப்பியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விடுமுறையின் போதுதான் இந்தியாவுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பெயர் சேர்க்க முடியும் என்கின்றனர். எனவே, பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் தனிப் பிரிவை ஏற்படுத்துவது அவசியம்.

கேரளத்தில் அடுத்து வரவிருக்கும் நியம சபா தேர்தலிலிருந்து இந்த முறையைக் கொண்டுவரவேண்டும் என இந்த அமைப்பின் தலைவர் கே.வி.சம்சுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் உரிமையில் விதிமுறை மாற்றம் தேவை"

கருத்துரையிடுக