காபூல்,டிச.7:அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் நியாயமானதுதான் எனக் கருதும் ஆப்கான் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டைவிட அதிகளவில் ஆப்கான் மக்கள் நியாயமாக கருதுவதாக பல்வேறு சர்வதேச ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரநிலையை சீர்குலைக்கும் பாதுகாப்பு கட்டமைப்பைக் குறித்து தங்களது அச்சத்தை ஆப்கானிகள் வெளியிட்டுள்ளனர் என பி.பி.சி, எ.பி.சி நியூஸ், ஜெர்மனியின் எ.ஆர்.டி, வாஷிங்டன் போஸ்ட் ஆகிய ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.
தாலிபானுக்கு முன்பை விட ஆதரவு அதிகரிக்கவில்லை. ஆனால், 73 சதவீத ஆப்கானிகளும் தாலிபான்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தாலிபான்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் 23 சதவீதம் பேர்களில் மாற்றம் ஏற்படவில்லை. அதே வேளையில் நேட்டோ-அமெரிக்க படையினரை தாக்கவேண்டும் எனக் கூறுவோர் 27 சதவீதம் பேர்களாவர்.
இந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதிக்கும் நவம்பர் 13 ஆம் தேதிக்குமிடையே நடத்தப்பட்ட சர்வேக்கு ஆப்கான் சமூக-பொருளாதார மையமும், ஒப்பீனியன் ரிசர்ச்சும் தலைமை தாங்கியது. சமீபத்தில் வெளியான ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறும் சர்வதேச பார்வையாளர்களின் கருத்துக்களும் நிலைநிற்கவே அதிபர் ஹமீத் கர்ஸாயியின் மீதான நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வே கூறுகிறது. 65 சதவீத மக்களும் தற்போதைய ஆட்சியில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அந்நியநாட்டு ராணுவத்தினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் நியாயமானவையே - ஆப்கான் மக்கள்"
கருத்துரையிடுக