9 டிச., 2010

கஷ்மீர் சிறுவனின் படுகொலையில் போலீஸ் அதிகாரிக்கு பங்கு: விசாரணையில் தகவல்

ஸ்ரீநகர்,டிச.9:இந்த ஆண்டு துவக்கத்தில் ஜம்மு-கஷ்மீரில் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் மரணத்தில் ஜம்மு கஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பங்குண்டு என மாஜிஸ்ட்ரேட் மட்டத்தில் நடைப்பெற்ற விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

துணை ஆய்வாளர் அப்துல் காலிகிற்கு இச்சம்பவத்தில் பங்கிருப்பதாக ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் மஸ்ரத் ஸாஹீன் முதன்மை மாஜிஸ்ட்ரேட்டிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ரன்பீர் தண்டனைச் சட்டத்தின்படி இவர் தண்டனைப்பெற தகுதியானவர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனி மெம்மோரியல் ஸ்டேடியத்திற்கு அருகே கடந்த ஜனவரி 31-ஆம்தேதி போலீஸ் கண்ணீர் புகைக்குண்டை பயன்படுத்தியபொழுது 13 வயது சிறுவனான வாமிக் ஃபாரூக் அநியாயமாக கொல்லப்பட்டிருந்தார். மூன்று சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடக்கும் வேளையில் நகரத்தில் அமைதியான சூழலே நிலவியது. இதற்கிடையே எவ்வித எதிர்ப்பும் இல்லாமலேயே ஒரு போலீஸ் காரர் ஃபாரூக்கை நோக்கி கண்ணீர் வெடிக்குண்டை வீசியுள்ளார். தனது நண்பர்களுடன் விளையாடிவிட்டு திரும்பியுள்ளான் ஃபாரூக். அவ்வேளையில்தான் இந்த கொடூர சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

இச்சம்பவத்திற்கு பின்னர் துணை ஆய்வாளரை அரசு இடைநீக்கம் செய்திருந்தது. தொடர்ந்து விசாரணைக்கும் உத்தரவிட்டது. சிறுவனின் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலைக்குற்ற வழக்கை பதிவுச் செய்யவேண்டுமெனக் கோரி அச்சிறுவனின் தந்தை மனு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரே போலீசாரிடமிருந்து அறிக்கையைக் கோரினார்.

வாமிக் ஃபாரூக் போலீஸ்காரரை கொல்ல முயற்சித்த மக்கள் கூட்டத்திலிருந்தார் என போலீஸ் தனது அறிக்கையில் கூறியிருந்தது. போலீஸின் அறிக்கைக்கு எதிராக கஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர் சிறுவனின் படுகொலையில் போலீஸ் அதிகாரிக்கு பங்கு: விசாரணையில் தகவல்"

கருத்துரையிடுக