6 டிச., 2010

சுதந்திர ஃபலஸ்தீனுக்கு பிரேசில் அங்கீகாரம்: இஸ்ரேலுக்கு நிராசை

ரியோடிஜெனீரா,டிச.6:1967 ஆம் ஆண்டில் இருந்த எல்லைப் பகுதிகளைக் கொண்ட ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரிப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது.

ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு நேற்று முன்தினம் அனுப்பிய கடிதத்தில் பிரேசில் அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அதிபர் மஹ்மூத் அப்பாஸின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாங்கள் எடுத்த தீர்மானமாகும் இது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், பிரேசிலின் தீர்மானத்திற்கு இஸ்ரேல் அதிருப்தியை தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகளை இல்லாமலாக்கும் செயல் பிரேசிலுடையது என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகாரத்திலிருந்து மாறுவதற்கு ஒரு மாதம் மீதமிருக்கையில் பிரேசில் அதிபர் லூலா டிசில்வா மேற்கொண்ட தீர்மானத்தில் தங்களுக்கு கவலை உண்டு என இஸ்ரேல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸ்ஸா, மேற்குகரை, கிழக்கு ஜெருசலம், 1967 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போரில் இஸ்ரேல் கைப்பற்றிய நிலங்கள் ஆகியவற்றை உட்படுத்தித்தான் புதிய ஃபலஸ்தீன் நாட்டிற்கான அங்கீகாரத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகே இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்கமுடியும் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய சக்திகளின் அபிப்ராயமாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுதந்திர ஃபலஸ்தீனுக்கு பிரேசில் அங்கீகாரம்: இஸ்ரேலுக்கு நிராசை"

கருத்துரையிடுக