20 டிச., 2010

ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம், நாசிகளின் யூத விரோதத்திற்கு சமம் - திக் விஜய்சிங்

புதுடெல்லி,டிச.20:ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம் ஜெர்மன் நாசிகளின் யூத விரோதத்திற்கு சமமானது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் பயங்கரவாதத்தின் விதையை விதைத்தது 1989 ஆம் ஆண்டு பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரையும், தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்புமாகும் என திக்விஜய்சிங் கூறினார்.

83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்த தீர்மானத்திற்கு ஆதரவாக உரை நிகழ்த்தும்பொழுது ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் திக்விஜய்சிங்.

1930களில் ஹிட்லரின் நாசிக் கட்சி யூதர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிட்ட அக்கிரமங்களுக்கு சமமான அளவில் தேசியவாதத்தின் திரைமறைவில் அதிகாரத்தை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ் நாசிகளின் பாணியை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது.

ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிரிவினையின் விதை விதைக்கப்பட்டது அத்வானி நடத்திய ரத யாத்திரையாகும். இந்திய வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயம்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவம். அத்வானி நடத்திய ரதயாத்திரை இந்தியாவில் தீவிரவாதம் தலைத்தூக்க காரணமானது.

சிசு மந்திர் பள்ளிக்கூடங்களில் புதிய தலைமுறையின் உள்ளங்களில் முஸ்லிம் விரோதத்தை வளர்த்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை அபாயகரமானதாகும். ராணுவத்திலும், காவல்துறையிலும், அதிகார மையங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தனது ஆட்களை ஊடுருவச் செய்துள்ளது.

முஸ்லிம்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல எனவும், ஆனால் பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் என்ற பா.ஜ.கவின் வாதம் கண்டிக்கத்தக்கது. அதேவேளையில், எல்லா ஹிந்துக்களும் பயங்கரவாதிகள் அல்ல என்றும், தீவிரவாதத்தின் பெயரால் கைதுச் செய்யப்பட்ட அனைத்து ஹிந்துக்களும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்று கூற இயலாதா? திக் விஜய்சிங் கேள்வி எழுப்பினார்.

ஹிம்சை மற்றும் வெறுப்பின் பாதிப்புதான் இந்திய தேசம் சந்திக்கும் மிகப்பெரிய சவால். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு துவக்கம் குறித்தது பா.ஜ.க வின் தொலைத்தொடர்பு அமைச்சர் பிரமோத்மகாஜன் தான் என திக்விஜய் சிங் தனது உரையில் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம், நாசிகளின் யூத விரோதத்திற்கு சமம் - திக் விஜய்சிங்"

கருத்துரையிடுக