மொராதாபாத்,டிச.20:உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே வன்முறை கும்பல் வீட்டிற்கு தீ வைத்ததில் அந்த வீட்டில் இருந்த சகோதரிகள் இருவர் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மொராதாபாத் அருகே உள்ள கொத்திவால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜோ. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவரது மகன் ராகேஷ் அப்பகுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நடந்த இரட்டைக் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ராகேஷுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
இந்நிலையில் அவரது தாய் ரஜோவும் சகோதரிகள் கீதா(22), மோனு(20) ஆகியோரும் வீட்டில் இருந்தனர். அவர்களது வீட்டை சனிக்கிழமை வன்முறை கும்பல் ஒன்று சூழ்ந்து வீட்டுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ரஜோ உயிர் தப்பினார். எனினும் சகோதரிகள் கீதா, மோனு ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இது குறித்து தான் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததாகவும் ஆனால் அவர்கள் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாகவும் ரஜோ குற்றம் சாட்டியுள்ளார்.
டி.ஐ.ஜி. அசோக் குமார் கூறுகையில், இச்சம்பவம் தற்கொலை அல்லது விபத்தாகத் தான் இருக்கக்கூடும். வன்முறை கும்பல் எதுவும் இதில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனினும் விசாரணை மேற்கொண்டுள்ளோம்' என்றார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தலித் அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்: on "உ.பி: தலித் சகோதரிகள் எரித்துக் கொலை?"
கருத்துரையிடுக