புதுடெல்லி,டிச.20:கிரிமினல் வழக்கு விசாரணையில் சாட்சிகள் சிறிய அளவில் முன்பின்னாக இருந்தாலும் அதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வெங்கட்ரமண்ணா என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இவ்விதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு குறித்து விவரம்: வெங்கட்ரமண்ணாவுக்கும், கடப்பாவைச் சேர்ந்த பவானி என்பவருக்கும் ஏப்ரல் 27,1992-ல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பவானி, அவரது பெற்றோர் வீட்டில் 1993-ல் தூக்கிலிட்டு இறந்தார். அவர் இறப்பதற்கு முன்னதாக மூன்று கடிதங்களை எழுதியிருந்தார். அக்கடிதங்களில் தமது இறப்புக்கு கணவர் வெங்கட்ரமண்ணாவும், அவரது குடும்பத்தாருமே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
திருமணம் ஆனதில் இருந்தே தனது பெற்றோரிடம் அடிக்கடி வரதட்சணை வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தியதாகவும், சித்ரவதைத் தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பவானி பெற்றோர், வெங்கட்ரமண்ணாவுக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வெங்கட்ரமண்ணாவையும், அவரது தந்தையையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அவரது சகோதரரை விடுவித்தது. வழக்கில் வெங்கட்ரமண்ணாவின் தாயாரும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் விசாரணை நடக்கும்போதே அவர் இறந்துவிட்டார்.
வெங்கட்ரமண்ணா, அவரது தந்தையாருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தண்டனையை ஆந்திர உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் வெங்கட்ரமண்ணா. எனக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளித்தவர்களின் வாக்குமூலம் சிறிய அளவில் முன்னுக்குப்பின்னாக உள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாமல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை ஏற்க இயலாது. இதனால் எனக்கும், எனது தந்தைக்கும் விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எச்.எஸ்.பேடி, சி.கே. பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு: பவானி திருமணம் ஆனதில் இருந்தே வரதட்சணை கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பதை அவர் எழுதிய கடிதங்களே உறுதி செய்துள்ளன. பவானி தற்கொலை செய்ததற்கு அவரது கணவரும், கணவர் குடும்பத்தாரும்தான் காரணம் என்பதை சாட்சியங்களும் உறுதிபடுத்தியுள்ளன. சாட்சிகள் அளித்துள்ள வாக்குமூலத்தில் சிறிய அளவில் முன்னுக்குப்பின் இருந்தாலும் பெருவாரியான வாக்குமூலம் வெங்கட்ரமண்ணாவும், அவரது தந்தையும் குற்றவாளிகள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிபடுத்துகிறது. இதனால் குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றம் உறுதி செய்த தண்டனையை இந்த நீதிமன்றமும் உறுதி செய்கிறது.
கிரிமினல் வழக்குகளை பொறுத்தமட்டில் குற்றவாளிகளுக்கு எதிராகச் சாட்சிகள் சிறிய அளவில் முன்பின்னாக இருந்தாலும் அதைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
செய்தி:தினமணி

0 கருத்துகள்: on "சாட்சிகள் முன்-பின்னாக இருந்தால் தவறில்லை - உச்சநீதிமன்றம்"
கருத்துரையிடுக