18 டிச., 2010

லெபனானில் இஸ்ரேலின் உளவுக்கருவிகள் கண்டுபிடிப்பு

பெய்ரூத்,டிச.18:பெய்ரூத்தின் அருகிலிலுள்ள மலைக் குன்றுகளில் இஸ்ரேல் நிர்மாணித்திருந்த உளவுக் கருவிகளை லெபனான் ராணுவம் கண்டுபிடித்து அழித்தது.

போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வின் உறுப்பினர்கள் இதனைக் கண்டுபிடித்து ராணுவத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உளவு கருவிகள் ஒன்றில் ஹிப்ரு மொழியில் அடையாளமிருந்தது. இதற்கிடையே ஸிதோன் துறைமுகத்தில் நடந்த குண்டுவெடிப்பு இத்தகையதொரு மற்றொரு உபகரத்தை அழிப்பதற்கான இஸ்ரேலின் முயற்சியா? என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இதனை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

தலைநகரான பெய்ரூத்தின் தெற்கு மற்றும் வடக்கிலுள்ள ஸானென், பாரூக் ஆகிய இடங்களிலுள்ள மலைக் குன்றுகளில் இஸ்ரேலின் கண்காணிப்பு கருவிகள் கண்டறியப்பட்டன.

மலைச்சரிவில் போலியான பாறையின் உள்ளே உளவுக் கருவிகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. ஸானெனில் கண்டெடுக்கப்பட்ட உளவுக் கருவிகளில் கேமரா, ஃபோட்டோ அனுப்புவதற்கான உபகரணம், தகவல்களை பெறுவதற்கான கருவி ஆகியவை இருந்தன. பாரூக்கில் கண்டெடுக்கப்பட்ட கருவி சிக்கலானதாகும்.

1715 மீட்டர் உயரத்தில் இக்கருவி நிறுவப்பட்டிருந்தது. ஹிஸ்புல்லாஹ்வின் ஆதிக்கம் நிறைந்த பேகா பள்ளத்தாக்கு மற்றும் சிரியாவின் பகுதிகளை கண்காணிக்கும் விதமாக இந்த கருவிகள் நிறுவப்பட்டிருந்தன.

லெபனான் மற்றும் ஃபலஸ்தீன் பிரதேசங்களிலும் வயர்லெஸ் ட்ரான்ஸ்மிஷன் மையங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் சக்தியுடையதாகயிருந்தது இக்கருவிகள். உளவுக்கருவிகளை அழித்த லெபனான் ராணுவம் சந்தேகத்திற்கிடமான பொருட்களை கண்டால் தகவல் கொடுக்குமாறு தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லெபனானில் இஸ்ரேலின் உளவுக்கருவிகள் கண்டுபிடிப்பு"

கருத்துரையிடுக