வாஷிங்டன்,டிச.18:அமெரிக்க மாநிலமான ஓக்லஹாமாவில் விலங்குகளை கொல்வதற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை பயன்படுத்தி கொலைவழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக் அலஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் டேவிட் டூட்டி என்ற கைதிக்கு கொடூரமான விஷத்தை ஏற்றி மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னர் சோடியம் தியோபெண்டல் என்ற மருந்தை பயன்படுத்தி மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஓக்லஹாமா மாநிலத்தில் இம்மருந்து கிடைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஃபெடரல் நீதிமன்றம் விலங்குகளைக் கொல்லும் மருந்தை சிறைக்கைதியை கொல்ல பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.
மூன்று சிறைத்தண்டனைப் பெற்ற டூட்டி 2001 ஆம் ஆண்டு சக சிறைவாசியை கொலைச் செய்ததற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கொடூர விஷத்தை பயன்படுத்தியதற்காக டூட்டி மற்றும் இதர இரண்டு சிறைக் கைதிகளின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். முன்பு பயன்படுத்தப்படாத கொடூர விஷத்தை பயன்படுத்தியது மனிதத் தன்மையற்ற செயல் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு புரிய வைத்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மரணத் தண்டனையை நிறைவேற்ற விலங்குகளுக்கான மருந்தை பயன்படுத்திய அமெரிக்கா"
கருத்துரையிடுக