இஸ்லாமாபாத்,டிச.18:வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கைபர் மாகாணத்தில் நேற்று மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன. கடந்த இரண்டு தினங்களுக்கிடையே நடைபெறும் இரண்டாவது தாக்குதலாகும் இது.
போராளிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடைப்பெற்றதாக வாஷிங்டன் கூறுகிறது. போராளிகள் மறைந்திருந்த இடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் லஷ்கரே இஸ்லாம் என்ற அமைப்பின் கமாண்டரும் கொல்லப்பட்டார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில மணிநேரங்களுக்குள்ளாக அமெரிக்காவின் ஆளில்லா விமானம் 3 தடவை நடத்திய தாக்குதலில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.
பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இத்தாக்குதல் நடைப்பெற்றதாக பெண்டகன் கூறிய பொழுதிலும் அத்தகையதொரு உடன்படிக்கை எதுவும் இல்லை என பாகிஸ்தான் கூறுகிறது.
அமெரிக்காவின் தாக்குதல் தங்களது நாட்டின் இறையாண்மையின் மீதான அத்துமீறல் என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. கடந்த வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர். செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு பிறகு பாகிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதலில் 250 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் தாக்குதல் போராளிகளுக்கு மக்கள் ஆதரவை பெருக்கவே உதவும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாஸித் கருத்து தெரிவித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்: 50 பேர் மரணம்"
கருத்துரையிடுக