புதுடெல்லி,டிச.18:இந்தியா-சீனா பேச்சுவார்த்தை தொடர்பாக எதிர்மறையான செய்திகளை வெளியிட்டதற்கு சீன பிரதமர் வென் ஜியபாவோ இந்திய ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார்.
ஊடகங்களின் நிலைப்பாடுகள் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் என ஜியபாவோ தெரிவித்தார்.
மூன்று தின இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன்பு அறிவு ஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பில் உரையாற்றினார் ஜியபாவோ.
இந்திய ஊடகங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை புரிய முடிகிறது. ஆனால், ஊடகங்கள் நட்புறவை வலுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுகளின் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கிடையே ஒரு துப்பாக்கிச் சண்டைக்கூட நடைபெறாத சூழலில் இந்திய ஊடகங்கள் இதற்கு எதிரான செய்தியை வெளியிட்டன. இரு நாடுகளுக்கிடையேயான தர்க்கத்தை ஊடகங்கள் தொடர்ந்து ஊதிப் பெரிதாக்குவதாக ஜியபாவோ குற்றஞ்சாட்டினார்.
பென் ஜியபாவோ மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா முன்வைத்த பிரச்சனைகளுக்கு எவ்வித தீர்வும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்திய ஊடகங்களை சாடிய சீன பிரதமர்"
கருத்துரையிடுக