கொச்சி,டிச.18:கேரள மாநில களமசேரியில் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பஸ்ஸை எரித்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
கொச்சியில் சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.விஜயகுமார் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் தடியன்ற விட நஸீர் முதல் குற்றவாளியாகவும், பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனியின் மனைவி ஸூஃபியா மஃதனி 10-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் மொத்தம் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 3 பேர் தலைமறைவாக உள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அப்துல்நாஸர் மஃதனியை தமிழக சிறையில் அடைத்ததற்கு பழிவாங்கும் முகமாக அம்மாநில போக்குவரத்துக்கழக பஸ்ஸை கடத்திச் சென்று இந்திய அரசுக்கெதிராக போர் செய்வதற்கும் மக்களை பீதிவயப்படுத்துவதற்காகவும் சதித்திட்டம் தீட்டி எரித்ததாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
2005 ஆம் ஆண்டு கேரள மாநில ஆலுவாவில் மஸ்ஜிதில் வைத்து மஜீத் பரம்பாயி மற்றும் ஸூஃபியா மஃதனி ஆகியோரின் கட்டளையின்படி ரகசிய கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தடியன்ற விட நஸீர் மற்றும் ஸூஃபியா மஃதனியின் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 81 சாட்சிகள் உள்ளனர். முன்பு கேரள போலீசாரால் இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முஹம்மது ஷெரீஃப் என்பவர் தற்போது இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என்.ஐ.ஏ இவ்வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்டது.
கேரள மாநிலத்தில் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் இரண்டாவது வழக்காகும் இது. இதற்கு முன்னர் கோழிக்கோட்டில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ தாக்கல் செய்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கேரளா:களமசேரி பஸ் எரிப்பு வழக்கில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது"
கருத்துரையிடுக