16 டிச., 2010

கஷ்மீர்:ஷியா முஸ்லிம்களின் முஹர்ரம் ஊர்வலம் வன்முறையில் முடிந்தது

ஸ்ரீநகர்,டிச.16:ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஷியா முஸ்லிம்கள் நேற்று (புதன்கிழமை) நடத்திய முஹர்ரம் துக்க ஊர்வலம் வன்முறையில் முடிந்தது.

ஸ்ரீநகர் உள்ளிட்ட கஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஷியா முஸ்லிம்களுக்கும் கஷ்மீர் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.மக்கள் கூட்டத்தை கலைத்துவிட போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர்.

ஹப்பா கடல், புத்ஷாஹ் சவுக், தங்கிபுரா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி ஷியா முஸ்லிம்கள் முஹர்ரம் ஊர்வலத்தை நடத்தினர்.இவர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் லத்திசார்ஜ் செய்ததால் வன்முறை வெடித்தது.ஆனால், மோதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதன் காரணமாக ஸ்ரீநகரில் ஐந்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொத்திபாக், மைசூமா, க்ரால்குட், ராம்முன்ஷி பேக், ஷஹீத் கஞ்ச் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முஹர்ரம் ஊர்வலத்தின்போது கஷ்மீர் அமைப்புகள் போராட்டங்களை நடத்த வாய்ப்புள்ளதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முஹர்ரம் ஊர்வலங்களின் மீது தாக்குதல் நடைப்பெறுவதால் 1990கள் முதல் முஹர்ரம் நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:ஷியா முஸ்லிம்களின் முஹர்ரம் ஊர்வலம் வன்முறையில் முடிந்தது"

கருத்துரையிடுக