பெங்களூர்,டிச.16:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல்நாஸர் மஃதனி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இதுக்குறித்து பதிலளிக்க கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தனது பங்கைக் குறித்த நேரில் கண்ட எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும், சிறையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரியும் அப்துல்நாஸர் மஃதனி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனி கைதுச் செய்யப்பட்டிருந்தார். கைதுச் செய்யப்பட்ட பிறகு புலனாய்வு அதிகாரிகளால் தனக்கு எதிராக எவ்வித சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்க இயலவில்லை. கர்நாடகா போலீஸ் ரகசிய திட்டத்தின் ஒருபகுதியாக தன்னை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளதாகவும் மஃதனி தனது ஜாமீன் கோரும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு:கர்நாடகா அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்"
கருத்துரையிடுக