வாஷிங்டன்,டிச.16:விக்கிலீக்ஸின் தகவல்களை வெளியிட்ட 25க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு அமெரிக்க விமானப்படை தடை ஏற்படுத்தியுள்ளது.
விமானப்படையின் கட்டுப்பாட்டிலிலுள்ள கம்ப்யூட்டர்களில் இனிமேல் விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்ட இணையதளங்களை பார்க்கவியலாது. இதனை கொலரடாவில் விமானப்படை ஸ்பேஸ் கமாண்ட் செய்தித் தொடர்பாளர் மேஜர் டோனி டோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ரகசிய விபரங்களை பிரசுரிக்கும் இணையதளங்களுக்கு பொதுவாகவே அமெரிக்க விமானப்படையில் தடை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், தாங்கள் இத்தகையதொரு உத்தரவை பிறப்பிக்கவில்லை என அமெரிக்க தரைப்படை மற்றும் கப்பற்படை அறிவித்துள்ளது.
பிரபல அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், ஜெர்மனியின் தேர் ஸ்பீகல், பிரிட்டனின் கார்டியன் உள்ளிட்ட பத்திரிகைகளின் இணையதளங்களும் விமானப்படையால் தடைச் செய்யப்பட்டுள்ளவற்றில் அடங்கும்.
உலகின் எந்தவொரு நபருக்கும் கிடைக்கும் விபரங்கள் அமெரிக்க விமானப்படை பணியாளர்களுக்கு மட்டும் கிடைக்காமல் தடுப்பது துரதிர்ஷ்டவசமானது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய விபரங்களை சிறப்பு அனுமதியில்லாமல் வாசிக்கக் கூடாது என அமெரிக்கா கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அரசு அதிகாரிகளுக்கும், அரசு ஒப்பந்தக்காரர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை எப்படி? நடைமுறைப்படுத்துவது என்பதுக் குறித்து விளக்கம் இல்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்ட இணையதளங்களுக்கு அமெரிக்க விமானப்படை தடை"
கருத்துரையிடுக