23 டிச., 2010

ஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் உரை நிகழ்த்திய திக்விஜய்சிங் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் இன அழித்தொழிப்புகள் ஜெர்மன் நாசிப் படையினரின் யூத இன அழித்தொழிப்பிற்கு சமம் என தெரிவித்தது இஸ்ரேலுக்கு அவமானமாகிவிட்டது போலும்.

இரண்டாம் உலகப் போரில் ஆரிய இன சுத்திகரிப்பில் நம்பிக்கைக் கொண்ட நாசிகள் நடத்திய யூத இன அழித்தொழிப்பையும் குஜராத்திலும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஹிந்துத்துவா சக்திகள் நடத்திவரும் முஸ்லிம் இனப்படுகொலைகளையும் ஒப்பிடமுடியாது என இஸ்ரேல் தூதரகம் கோபத்தோடு பதிலளித்துள்ளது.

ஆனால், இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு சென்று நாசிச-பாசிச தத்துவம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதனைக் குறித்து ஆய்வுச்செய்து அதனை இந்தியாவில் செயல்படுத்த துணிவுடன் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகரின் நூல்களில் காணக்கிடைப்பது இஸ்ரேலிய தூதரகத்தின் திறமைசாலிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது நம்ப முடியாததாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய 'நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது (We or Our Nation Defined)' என்ற நூலின் துவக்கமே நாசி இயக்கத்தினரை புகழ்த்தியவாறே அமைந்துள்ளது.

இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய சியோனிச தத்துவம் யூதர் அல்லாத இனத்தவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மட்டுமல்ல, தங்களது ஆக்கிரமிப்பிற்கும் அட்டூழியத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கூட்டாக படுகொலைச் செய்வதை தேசிய கொள்கையாகவும் மாற்றியது.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிபுரிந்த வேளையில் சியோனிஷ தலைவர்கள் நாசி ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினர் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருந்தபோதிலும் யூத வரலாற்றாசிரியர்களே ஆதாரத்துடன் இதனை நிரூபித்துள்ளனர்.

இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமாக இனப்படுகொலையை நடத்தியது அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேக் காரணத்தினால்தான் என்பதுக் குறித்து இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் மட்டுமே சந்தேகம் ஏற்படும்.

அபினவ் பாரத், ஜெய் வந்தேமாதரம் போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாதுடன் தொடர்பு வைத்திருப்பதற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது சியோனிஷ-ஹிந்துத்துவா உறவு வலுப்பெற்றதற்கும் காரணம் இனப்பகையும், இன அழித்தொழிப்புமாகும்.

அபினவ் பாரத்தின் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த கூடிய ரகசிய கூட்டங்களிலெல்லாம் இஸ்ரேலின் உதவியைக் குறித்து தொடர்ந்து பேசிய தகவல்கள் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை ஹேமந்த் கர்காரே விசாரிக்கும் போது வெளிவந்தன.

நாசிகள் தங்களது இன அழித்தொழிப்பு வேட்டையை நடத்திய காலக்கட்டத்தில் யூதர்களை மட்டுமல்ல போலந்து நாட்டவர்களையும், ஜிப்ஸிகளையும் சிறையிலடைத்து கொலைச் செய்துள்ளனர். ஆனால், இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு யூதர்களை மட்டுமே ஹிட்லர் தலைமையிலான நாசிக்கள் இனப்படுகொலைச் செய்தார் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பது 'யூத படுகொலை' என்ற பிராண்டை பயன்படுத்தி ஃபலஸ்தீனர்களை இன அழித்தொழிப்பு செய்வதற்கான சியோனிஷத்தின் கொடூரமான கொள்கையாகும்.

ஆனால், அந்த பருப்பு இங்கு வேகாது. ஏனெனில் இனப்பகை, இன அழித்தொழிப்பு ஆகியவற்றில் ஹிந்துத்துவா சக்திகளும், சியோன்ஷ்டுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது இந்தியர்களுக்கு தெரியும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"

கருத்துரையிடுக