24 டிச., 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரிடம் சி.பி.ஐ விசாரனணை

புதுடெல்லி,டிச:ம‌க்கா ம‌ஸ்ஜித் குண்டுவெடிப்பு வ‌ழ‌க்கில் மூத்த‌ ஆர்.எஸ்.எஸ் த‌லைவ‌ர் இந்திரேஷ் குமாரிட‌ம் சி.பி.ஐ விசார‌ணை ந‌ட‌த்திய‌து.

ம‌க்கா ம‌ஸ்ஜித், அஜ்மீர் த‌ர்கா, ச‌ம்ஜோதா எக்ஸ்பிர‌ஸ் ஆகிய‌ குண்டுவெடிப்புக‌ளுக்கு பின்ன‌ணியில் தூண்டுகோலாக‌ இருந்து ப‌ண‌ உத‌வி அளித்த‌துத் தொட‌ர்பாக‌த்தான் சி.பி.ஐ விசார‌ணை ந‌ட‌த்தியுள்ள‌து. வியாழ‌க்கிழ‌மை ஆஜ‌ராக‌வேண்டுமென‌ சி.பி.ஐ சம்மனை ஆர்.எஸ்.எஸ் அலுவ‌ல‌க‌த்திற்கு அனுப்பியிருந்த‌து.

இத‌ன‌டிப்ப‌டையில் சி.பி.ஐ அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ந்த‌ இந்திரேஷ் குமாரிட‌ம் விசார‌ணையை மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. கடந்த நான்கு ஆண்டுக‌ளாக‌ ஆர்.எஸ்.எஸ் தேசிய‌ செய‌ற்குழு உறுப்பின‌ராக‌ ப‌த‌வி வ‌கித்துவ‌ருகிறார் இந்திரேஷ்குமார்.

ம‌லேகான் குண்டுவெடிப்பு வ‌ழ‌க்கில் கைதுச் செய்ய‌ப்ப‌ட்ட‌ ஹிந்துத்துவா தீவிர‌வாதிக‌ள் இந்திரேஷ் குமார் குறித்து வாக்குமூல‌ம் அளித்திருந்த‌ன‌ர். மேலும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வ‌ழ‌க்கின் குற்ற‌ப்ப‌த்திரிகையில் இந்திரேஷ்குமாரின் பெய‌ர் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து.

இந்நிலையில் ம‌க்கா ம‌ஸ்ஜித் குண்டுவெடிப்பு வ‌ழ‌க்கில் சி.பி.ஐ இந்திரேஷ் குமாரை விசார‌ணைக்கு உட்ப‌டுத்தியுள்ள‌து.முத‌ன்முத‌லாக‌ ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய‌ தலைவ‌ர் ஒருவ‌ர் இந்தியாவில் தீவிர‌வாத‌ செய‌லுக்காக‌ விசார‌ணைக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ளார் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

இந்திரேஷ்குமாரின் ப‌ங்கு குறித்து சி.பி.ஐயிட‌ம் ஆதார‌ங்க‌ள் இருந்த‌போதிலும் அவ‌ரைக் கைதுச்செய்ய‌ மேலும் ஆதார‌ங்க‌ளை தேடுகிற‌து சி.பி.ஐ.

ம‌த்திய‌ பிர‌தேச‌ம், ம‌ஹாராஷ்ட்ரா, உத்த‌ர‌பிர‌தேச‌ம், ஜார்க‌ன்ட், குஜ‌ராத் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் செய‌ல்ப‌டும் ஹிந்துத்துவா ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளுக்கு ப‌ண‌ உத‌வி அளிப்ப‌தும், அவ‌ர்க‌ளை தீவிர‌வாத‌ செய‌ல்க‌ளுக்காக‌ ஒன்றிணைப்ப‌தும் இந்திரேஷ்குமார் என‌ ம‌க்கா ம‌ஸ்ஜித் குண்டுவெடிப்பு வ‌ழ‌க்கில் கைதான‌ சுவாமி அஸிமான‌ந்தா என்ற‌ ஹிந்துத்துவ‌ ப‌ய‌ங்க‌ர‌வாதி வாக்குமூல‌ம் அளித்துள்ளான்.

ம‌லேகான், மொடாஸா, அஜ்மீர், ம‌க்கா ம‌ஸ்ஜித், டெல்லி ஜும்ஆ ம‌ஸ்ஜித், ந‌ந்த‌த்,ச‌ம்ஜோதா எக்ஸ்பிர‌ஸ் ஆகிய‌ குண்டுவெடிப்புக‌ளுக்கு திட்ட‌மிட்டுக் கொடுத்த‌து இந்திரேஷ்குமார் என‌ ஹிந்துத்துவா ப‌ய‌ங்க‌ர‌வாதி அஸிமான‌ந்தா விசார‌ணையின்போது தெரிவித்திருந்தான்.

குண்டுவெடிப்பு வ‌ழ‌க்கில் முக்கிய‌ சூத்திர‌தாரியான‌ சுனில் ஜோஷி சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்ட‌தில் இந்திரேஷின் ப‌ங்கினைக் குறித்தும் சி.பி.ஐ விசார‌ணை மேற்கொண்டுள்ள‌து.

ர‌க‌சிய‌ம் வெளியில் க‌சியாம‌லிருக்க‌ ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளே கொன்றுள்ள‌ன‌ர் என்ப‌து வெட்ட‌ வெளிச்ச‌மாகியிருந்த‌து. துணை ஜ‌னாதிப‌தி ஹ‌மீத் அன்ஸாரி, கோத்ரா ரெயில் எரிப்பை விசார‌ணைச்செய்த‌ க‌மிஷ‌னின் த‌லைவ‌ர் நீதிப‌தி யு.ஸி.பான‌ர்ஜி ஆகியோரையும் கொல்வ‌த‌ற்கு ஹிந்துத்துவா தீவிர‌வாதிக‌ள் திட்ட‌ம் தீட்டியிருந்த‌தாக‌ அஸிமானந்தா விசார‌ணையின்போது தெரிவித்திருந்தான்.

தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரிடம் சி.பி.ஐ விசாரனணை"

கருத்துரையிடுக