ராய்ப்பூர்,டிச.25:மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கும் இதர இரு நபர்களுக்கும் சட்டீஷ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
டாக்டர் பினாயக் சென், மாவோயிஸ்டுகளின் சித்தாந்தகுரு நாராயண் சன்யால், கொல்கத்தா தொழிலதிபர் பியூஸ் குஹா ஆகியோர் தேசத்திற்கு எதிராக போர் புரிவதற்கு மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
124எ(தேசத்துரோகம்), 120பி(தேசத்திற்கு எதிரான சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின்படி இவர்கள் குற்றவாளிகள் என கூடுதல் செசன்ஸ் நீதிபதி பி.பி.வர்மா தீர்ப்பளித்தார்.
சத்தீஷ்கர் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதத் தொகையும் கட்டவேண்டும். சட்டவிரோத செயல்பாடுகளை தடைச்செய்தல் சட்டத்தின்படி இரண்டு ஆண்டு சிறையும் 1000 ரூபாய் அபராதமும் கட்டவேண்டும். சட்டத்தின் 20-வது பிரிவின்படி சன்யாலுக்கு 10 ஆண்டு சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனையை ஒரே கால அளவில் அனுபவித்தால் போதும்.
குழந்தைகள் நல மருத்துவரும், மக்கள் சிவில் உரிமை யூனியன்(பி.யு.சி.எல்) அமைப்பின் துணைத் தலைவருமான பினாயக் சென், சிறையிலிலுள்ள சன்யாலின் கடிதங்களை மாவோயிஸ்ட்களுக்கு அளித்தார் என்பதுதான் குற்றம்.
பல ஆண்டுகளாக சத்தீஷ்கரில் ஆதிவாசிகளுக்கும், வறுமையில் உழலும் மக்களுக்கிடையே மருத்துவசேவை நடத்திவந்த பினாயக் சென் கடந்த 2007 ஆம் ஆண்டு பிலாஸ்பூரில் வைத்து கைதுச் செய்யப்பட்டார். கைதுச் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
சிறைக்கைதிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக சென் போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறைக்கு வருகைத் தந்துக்கொண்டிருந்தார்.
மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளுக்கு வலுசேர்க்க முயன்றதாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஆந்திராவில் கம்மத்தில் வைத்து கைதான நாராயண் சன்யால் மற்றும் ப்யூஸ் குஹாவிற்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்கள்.
35 வயதான குஹா கடந்த ஆண்டுதான் கைதுச் செய்யப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடுச் செய்யப்போவதாக சென்னின் வழக்கறிஞர் மஹேந்திர துபை தெரிவித்துள்ளார்.
சென்னின் மனைவி எலீனாவும், மனித உரிமை ஆர்வலர்களும் இத்தீர்ப்புக் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சென்னின் மீது தேசத்துரோகம் குற்றஞ்சுமத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை என சென்னின் மனைவி எலீனா தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவியலாது என சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார். மனித உரிமை செயல்பாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தீர்ப்பு இது என அவர் தெரிவித்தார்.
சன்யால் மாவோயிஸ்ட் என்பதற்கான ஆதாரமில்லை என எதிர்தரப்பு வழக்கறிஞர் அமீத் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை"
கருத்துரையிடுக