25 டிச., 2010

பதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்

புதுடெல்லி,டிச:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

குற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர்.

குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது.

தற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்"

கருத்துரையிடுக