25 டிச., 2010

சச்சார், மிஷ்ரா கமிஷன்களின் சிபாரிசுகளை உடனடியாக

புதுடெல்லி,டிச.25:சச்சார்-மிஷ்ரா கமிஷன்களின் சிபாரிசுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மீரட் கருத்தரங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தேசத்தின் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளின் பெயரால் கைதுச் செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் என இக்கருத்தரங்கம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய கன்வீனர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் இக்கருத்தரங்கை துவக்கிவைத்தார். வருடக்கணக்கில் முஸ்லிம்கள் அரசு வேலைகளிலிருந்து புறக்கணிக்கப்பட்ட சூழலில் சமூக நீதியை உறுதிச்செய்ய இடஒதுக்கீடு இன்றியமையாதது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

முன்னேற்றம் அடைவதற்கு கல்வியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என கருத்தரங்கு முஸ்லிம் சமுதாயத்திடம் கோரிக்கை விடுத்தது. திருமணங்களில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இக்கருத்தரங்கம் முஸ்லிம்களுக்கு கோரிக்கை விடுத்தது.

இக்கருத்தரங்கில் எஸ்.டி.பி.ஐ ஹரியானா, பஞ்சாப் கன்வீனர் அப்துற்றஷீத் அக்வான், இமாம்ஸ் கவுன்சில் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் மவ்லவி முஹம்மது ஹனீஃப் அல்வரி, உள்ளூர் எம்.எல்.ஏவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சாந்தவீர் சிங், சமாஜ்வாதி கட்சி தலைவர்களான அதுல்பிரதான், அப்துல்காதிர், மீரட் ஜில்லா பரிஷத் தலைவர் மனிந்திரபால், மவ்லானா ஜுனைத் காஸிம், மவ்லானா டாக்டர் அஸ்ரார் அஹ்மத் ஃபலாஹி, மவ்லானா இப்ராஹீம், மவ்லானா நாஃபிஸ் அஹ்மத், காரி உபைதுற்றஹ்மான், மவ்லானா முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சச்சார், மிஷ்ரா கமிஷன்களின் சிபாரிசுகளை உடனடியாக"

கருத்துரையிடுக