புதுடெல்லி,டிச.25:2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விசாரணையின்போது முறைகேடு புகார்கள் குறித்து ராசாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு லைசென்ஸ் வழங்கப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் பினிதா தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பான விரிவான விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
இந்த விவகாரம் குறித்து அரசியல் தரகர் நீரா ராடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். இரு நாள்களுக்கு முன்பு தெற்கு டெல்லியில் உள்ள நீரா ராடியாவின் பண்ணை வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதைவிட அதிகமாக ராசாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ராசாவுக்கு முன்னரே சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல்நல பரிசோதனை, முக்கிய அலுவல்கள் காரணமாக வேறு தேதி கேட்டிருப்பதாக ராசா திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து புதன்கிழமை டெல்லி புறப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் பதவி விலகியதைத் தொடர்ந்து 2007 மே 18-ல் அந்தத் துறை அமைச்சராக ராசா பதவியேற்றார். அதன்பின்னர் 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மே 31-ல் மீண்டும் அதே துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அவருடைய பதவி காலத்தின்போது 2008-ல் வழங்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அண்மையில் வெளியிட்ட தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நெருக்கடியால் நவம்பர் 14-ல் ராசா பதவியை ராஜிநாமா செய்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தாமதப்படுத்தி வந்த சிபிஐ அதிகாரிகள், உச்ச நீதிமன்ற கண்டிப்புக்குப் பின்னர் தங்களது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு

எட்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராசா, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகத் தெரிவித்தார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு என்னால் வேறு எதுவும்கூற முடியாது என்று கூறிவிட்டு நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்று விட்டார்.
டேப், டைரி ரகசியங்கள்
குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும்படி
ராசாவிடம், நீரா ராடியா பேரம் நடத்திய தொலைபேசி உரையாடல் அடங்கிய டேப்புகள் சிபிஐ வசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு ராசாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது 3 டைரிகள் சிக்கின. அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தமிழிலும், ஆங்கிலத்திலும் பல்வேறு ரகசிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
டேப், டைரி தகவல்களின் அடிப்படையில் ராசாவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்ரூவராக மாறும் அதிகாரிகள்?
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள் ஆர்.கே. சண்டோலியா, ஏ.கே. ஸ்ரீவத்ஸவா ஆகியோர் அப்ரூவர்களாக மாறக்கூடும் என்று சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி

0 கருத்துகள்: on "ஆ.ராசாவிடம் எட்டு மணிநேரம் சி.பி.ஐ விசாரணை"
கருத்துரையிடுக